Exclusive: பேரறிவாளன் விடுதலை! இது புளிச்சுபோன விஷயம்! என்னிடம் கேட்காதீங்க! காங் எம்பி ஜெயக்குமார்!
சென்னை: பேரறிவாளன் விடுதலை விவகாரம் ரொம்ப புளிச்சுபோன விஷயம் என்றும் இதைப்பற்றி தாம் பேச ஒன்றுமில்லை எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை பொறுத்தவரை ஒரு நீதிமன்ற தீர்ப்பாக மட்டுமே தாம் பார்ப்பதாகவும் இதில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை எனவும் கூறினார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கருத்தறிய முயன்ற பல காங்கிரஸ் தலைவர்கள் ஆளை விடுங்க சார் என ஒன் இந்தியா தமிழிடம் இருந்து எஸ்கேப் ஆகிய நிலையில் ஜெயக்குமார் எம்.பி. மட்டும் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
Recommended Video

பேரறிவாளன் விடுதலை
''பேரறிவாளன் விடுதலையை பொறுத்தவரை நீதிமன்றத்தின் முடிவு இது. இதில் நான் என்ன சொல்ல முடியும். இரண்டாவது பேரறிவாளன் விஷயம் ரொம்ப புளிச்சுபோன விஷயம், இதை விடுங்க சார். இதைப்பற்றி மேலும் நான் பேசவிரும்பவில்லை.
நீதித்துறைக்கு எதிராக நாம் என்ன செய்துவிட முடியும். நீங்கள் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை பொறுத்தவரை பேரறிவாளன் விடுதலையை நான் வரவேற்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை.''

காங்கிரஸ் கோபண்ணா
முன்னதாக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கோபண்ணாவிடம் நாம் பேசினோம். பேரறிவாளன் தீர்ப்பு வெளியாகி
அரை மணி நேரத்துக்கு பிறகு தான் நாம் அவரை தொடர்புகொண்டோம். ஆனால் அவரோ அப்படியா, எனக்கு எதுவும் இதைப்பற்றி தெரியாதே, நான் வெளியே இருக்கிறேன், என்னவென்று தெரிந்துகொண்டு பேசுகிறேன் எனக் கூறி நாசுக்காக கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

முக்கியத் தலைவர்கள்
இதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்கள் பலரும் நமது அலைபேசி அழைப்பையே ஏற்க மறுத்து கருத்துக் கூறுவதிலிருந்து எஸ்கேப் ஆகினர்.
இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஒருவர், மிகவும் நொந்த நிலையில் நான் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன், ப்ளீஸ் என்னிடம் இதைப்பற்றி கேட்காதீர்கள் எனக் கூறி நம்மிடமிருந்து நழுவிக்கொண்டார்.

கட்சி மேலிடம்
காங்கிரஸ் மேலிடத்தின் எண்ணவோட்டத்தை அறிந்து அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள்
மற்றும் அறிவுரைகள் படி தமிழக காங்கிரஸ் கமிட்டி இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று மாலைக்குள் இது தொடர்பாக அறிக்கையை கே.எஸ்.அழகிரி வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications