இருளை கிழிக்க போகும் ஒளி.. சந்திரயான் 4க்காக.. சந்திரயான் 3ஐ அனுப்பிய இஸ்ரோ.. இது "சந்திர" வியூகம்!
சென்னை: இந்தியா நிலவிற்கு சந்திரயான் திட்டங்களை அனுப்புகிறது.. லேண்டரை அனுப்புகிறது.. ரோவரை அனுப்புகிறது.. இதெல்லாம் ஓகே.. ஆனால் இதை எல்லாம் ஏன் அனுப்ப வேண்டும்? இஸ்ரோவின் திட்டம்தான் என்ன? வாருங்கள் பார்க்கலாம்!
சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு பின்வரும் முக்கிய காரணங்கள் உள்ளன.

1 நிரூபிப்பது: சந்திரயான் மூலம்தான் நிலவில் களமிறங்க முடியும் என்பதை இஸ்ரோ நிருபிக்க முடியும். இன்று அதை இஸ்ரோ நிரூபித்துள்ளது. இதன் மூலம் மற்ற நாடுகளின் திட்டங்களை நிறைவேற்ற இந்தியா களமிறங்கும். அதாவது நிலவிற்கு வேறு நாடுகளின் திட்டங்களை அனுப்ப இஸ்ரோ பயன்படுத்தப்படும். இஸ்ரோ ஜப்பானின் ஆராய்ச்சி அமைப்புகளை நிலவிற்கு அனுப்ப உள்ளது. அதற்கு முன்னதாக நிலவில் ரோவரை இறக்க முடியும் என்பதை நிரூபிக்க இஸ்ரோ சந்திரயான் 3 திட்டம் பயன்படுத்தப்படுகிறது. சந்திரயான் 2 தோல்வி அடைந்ததும் 3 திட்டத்தை தொடங்கியது இதனால்தான்.
2 நிலவில் பேஸ் அமைப்பது: நிலவில் உலக நாடுகள் எதிர்காலத்தில் பேஸ் அமைக்க உள்ளது. அதாவது விண்வெளி பயணங்களை மேற்கொள்ள நிலவில் இருந்து பயணம் செய்ய வசதியாக அங்கே பேஸ் அமைக்கப்படலாம். அங்கே ஒரு ராக்கெட் ஸ்டான்ட் போல வைத்துக்கொள்ளுங்கள். இதற்கான ரேஸில் இஸ்ரோவும் இறங்கி உள்ளது. அங்கே பேஸ் அமைக்கும் குழுவில் இஸ்ரோவும் இணையலாம்.
3 நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது இஸ்ரோதான். அதே இஸ்ரோதான் தற்போது தென் பகுதியில் நிலவில் தண்ணீர் ஐஸ் கட்டியாகி இருப்பதை கண்டுபிடிக்கும். அப்படி செய்யும் பட்சத்தில் நிலவில் விவசாயம் செய்வது, பொருட்களை விளைவிப்பது ஆகிய ஆராய்ச்சிகளை கூட செய்ய முடியும்.
4 இதெல்லாம் போக சந்திரயான் 4 திட்டத்தின் முன்னோட்டமே சந்திரயான் 3. இந்த 4ம் திட்டத்தின் மூலம் நிலவில் ஆராய்ச்சி செய்வது முதல் கட்டம். அதேபோல் அங்கே இருந்து சாம்பிள் எடுத்து அதை சோதனை செய்வது இரண்டாம் கட்டம். இன்னொரு பக்கம் நிலவில் இரவு நேர ஆய்வு செய்வது மூன்றாம் கட்டம். இந்த சந்திரயான் 4ம் திட்டத்தில் பெரிய நீண்ட கால பயன்பாட்டிற்கான ரோவர் அனுப்பப்படும். அதன் முன்னோட்டமாக சந்திரயான் 3 இருக்கிறது.
கிட்டத்தட்ட நிலவின் இருளான பகுதியில் ஒளி செலுத்தி அங்கே என்ன இருக்கிறது என்பதை இஸ்ரோ கண்டுபிடிக்க உள்ளது. இதற்கு சந்திரயான் 3 மற்றும் சந்திரயான் 4 உதவியாக இருக்கும்.
நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தரையிறங்கி உள்ளது. தரையிறங்கிய பிறகு, லேண்டர் 14 பூமி நாட்களுக்கு (ஒரு சந்திர நாள்) மேற்பரப்பில் பொருட்களை இந்த ரோவர் சேகரிக்கும்.
குறிக்கோள் என்ன?: சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.
லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல்.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தல்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்தல்.
விக்ரம் லேண்டர் உள்ளேதான் சந்திராயன் 3ன் ரோவர் இருக்கும். பிரக்யான் (சமஸ்கிருதத்தில் "ஞானம்"), விக்ரமில் இருந்து வெளியே வரும். அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்லும். இது லேண்டர் விக்ரமில் இருந்து விலகி சென்றாலும் எல்லா நேரமும் விக்ரமின் கண் பார்வையில் இருக்கும். நிலவின் தரைப்பகுதி, மண் பகுதியை இது ஆய்வு செய்யும்.
இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதில் மொத்தம் 6 சக்கரங்கள் இருக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications