ஆடிய நாம் தமிழர் அஸ்திவாரம்.. ஆசையாக இருந்த தவெக கட்சிக்கும் செக் மேட்.. வசமாக வைத்த திமுக!
சென்னை: நாம் தமிழர் கட்சியிலிருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். அமைச்சர் நாசர் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாதக முக்கிய நிர்வாகிகள் சபரீஷ், சதீஷ் உள்ளிட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் முகமாக.. மாவட்ட அளவில் இருந்த பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர். கட்சியின் முக்கிய தலைவர்கள் என்று கருதப்பட்ட பல உள்ளூர் தலைகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். அதிலும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வெளியேற தொடங்கி உள்ளன. அதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கி உள்ளது. அந்த கட்சியில் மீண்டும் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வரும் நாட்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் வருகையே நாம் தமிழரில் பலர் வெளியேற மிக முக்கியமான காரணமாக மாறியது. ஆனால் எதிர்பார்க்காத வகையில் இதுவரை தமிழக வெற்றிக் கழகம் பக்கம் யாரும் போகாமல் திமுகவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். .
தமிழக வெற்றிக்கழகம்.. அதிமுகவை எதிர்க்கிறது.. திமுகவை எதிர்க்கிறது.. பாஜகவை எதிர்க்கிறது. இது கிட்டத்தட்ட நாம் தமிழரின் ஸ்டைல்தான்.. இதை மனதில் வைத்தே நாம் தமிழர் நிர்வாகிகள் பலர் வெளியேறுவதாக கூறப்பட்ட நிலையில் இவர்கள் தவெக பக்கம் போகாமல் விஜய் பக்கம் செல்ல தொடங்கி உள்ளனர்.
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அண்மையில் அறிவித்தனர். இதுதான் நாம் தமிழர் கட்சியின் பிரிவினைக்கு தொடக்க புள்ளியாக இருந்தது. கட்சியில் சீமான் தங்களின் பேச்சுக்கு மரியாதையே கொடுக்கவில்லை என்பதை காரணமாக கூறி இருந்தனர். அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கட்சியில் மேலும் பிரச்னையை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் யாரையும் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியின் சீமான் நினைக்கவில்லை.
சீமான் இவர்களிடம் பேசாமல் போனதே இதற்கு முக்கிய காரணம். போனால் போகட்டும்.. கட்சி யாரையும் நம்பி இல்லை என்று சீமான் கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சமீபத்தில் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம், கட்சியிலிருந்து விலகுவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியில் தனக்கு மரியாதையே இல்லை என்று கூறி இவர் வெளியேறி உள்ளார். இவர்களும் விரைவில் திமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம்












Click it and Unblock the Notifications