இது மட்டும் வேணுமோ? கை வைக்க கூடாத இடத்தில் சீண்டிய எடப்பாடி.. கொதிக்கும் "ஜாதி".. சிரிக்கும் ஓபிஎஸ்
சென்னை: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவிற்காக எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான் தங்க கவசம் விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தேவர் அமைப்புகள் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் தற்போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் தொடர்பாக மோதல் எழுந்து உள்ளது. பொதுவாக முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை நிகழ்வையொட்டி, தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும்.
பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக தங்க கவசம் அணிவிக்கப்படும். இந்த கவசம் அதிமுகவின் சொத்து. தங்க கவசத்தை அணிவித்துவிட்டு, பின்னர் பூஜை முடிந்ததும் அதை வங்கியில் மீண்டும் பாதுகாப்பாக வைத்து விடுவார்கள்.

வங்கி
இந்த தங்க கவசத்தை யார் பெறுவது, அதை குரு பூஜை அன்று யார் விழா கமிட்டியிடம் கொடுப்பது என்ற போட்டிதான் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் இந்த தங்க கவசத்தை பெறுவதற்கு தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் ஆதரவு உள்ளது. அதே சமயம் ஓ பன்னீர்செல்வத்திற்கு தென் மண்டலத்தில் முக்குலத்தோர் ஆதரவு உள்ளது.

ஆதரவு
இந்த முக்குலத்தோர் ஆதரவை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வருகிறார். இந்த தங்க கவச விவகாரம் மூலம் தேவர்கள் உள்ளிட்ட முக்குலத்தோரை தன் பக்கம் இழுக்கலாம். தேவருக்கு தங்க கவசத்தை அணிவித்து அவர்களின் ஆதரவை பெறலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டு வைத்து இருந்தார். இதற்காக திண்டுக்கல் சீனிவாசன்,ஆர்பி உதயகுமார் ஆகியோரை வைத்து தீவிரமாக காய் நகர்த்தி வந்தார்.

பொருளாளர்
அதோடு எடப்பாடி தரப்பு பொருளாளர் என்ற ரீதியில் கவசத்திற்கு திண்டுக்கல் சீனிவாசன் உரிமை கோரி வந்தார். இதற்காக வழக்கும் தொடுத்தார். இந்த நிலையில்தான் திடீரென தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவிற்காக எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை என்ற செய்தி வெளியானது. எடப்பாடி பசும்பொன் வர மாட்டார். மாறாக அவர் நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்வார் என்று கூறப்பட்டது. இதுதான் தேவர் சமூகத்தை சேர்ந்த பல்வேறு சங்கங்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

கோபம்
எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்கு வர மாட்டார். குரு பூஜைக்கு நேரில் வர மாட்டார். ஆனால் தங்க கவச உரிமை மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? இது எப்படி நியாயம் .. சென்னையிலேயே இருக்கும் அவருக்கு எதுக்கு தங்க கவசம்.. என்று தேவர் சமூகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கொதித்து போய் உள்ளன. எடப்பாடி மீது தேவர் சமூக அமைப்புகள் கோபத்தில் இருப்பதால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முக்குலத்தோர் ஆதரவு எடப்பாடி பக்கம் செல்வதற்கு இருந்த ஒரு வாய்ப்பும் போய்விட்ட சந்தோஷத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறாராம்.

வழக்கு
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நேற்று தங்க கவச வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியது. தேவர் தங்கக் கவசத்தை தங்களிடம் வழங்கவேண்டும் என்ற ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கோரிக்கைகளை நிராகரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. இரண்டு தரப்பின் கோரிக்கையும் ஒன்றாக நேற்று நிராகரிக்கப்பட்டது. மாறாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால், தேவர் தங்கக் கவசத்தை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தேவர் ஜெயந்தியின் போதும் தங்க கவசத்தை வருவாய் அலுவலர் விழா கமிட்டியிடம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்












Click it and Unblock the Notifications