இந்த 4ல் ஒன்றை சூஸ் பண்ணுங்க.. நீங்க தூங்குற பொஷிஷனை வச்சே உங்க கேரக்டரை கண்டுபிடிக்கலாம்! ரெடியா?
சென்னை: நீங்கள் இரவில் தூங்கும் முறையை வைத்தே உங்களின் கேரக்டர் என்னவென்று எளிதாக சொல்லிவிட முடியும்.
தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமானது. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு இரவில் மட்டுமே நாம் உடலுக்கு தூக்கம் மூலம் ஓய்வு கொடுக்கிறோம். மனிதர்கள் வாழ்நாளில் 3ல் ஒரு பாகத்தை தூங்கி கழிப்பதாக ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது. அதாவது சராசரியாக மனிதர்கள் 229,961 மணி நேரம் வரை தங்கள் வாழ்நாளில் தூங்கி கழிக்கிறார்கள்.

தூங்கும் முறை
ஆம் நீங்கள் எப்படி படுத்து தூங்குகிறீர்கள் என்பதை வைத்தே உங்கள் குணத்தை சொல்ல முடியும். இந்த இமேஜில் மொத்தம் நான்கு டைப் தூக்க முறைகள் உள்ளன. அதாவது நேராக படுப்பது, ஒரு சைடில் படுப்பது, கூனி படுப்பது, குப்புற படுப்பது என்று 4 வகை தூக்க முறைகள் உள்ளன. இமேஜை பாருங்கள். இதில் நீங்கள் எந்த முறை என்று தேர்வு செய்யுங்கள். அதை வைத்தே உங்களின் குணத்தை தெரிந்து கொள்ள முடியும். வாருங்கள் பார்க்கலாம்.

டைப் 1
நீங்கள் முதல் டைப் என்றால்.. அதாவது உங்கள் முதுகு பக்கம் பெட்டில் இருந்து உங்கள் முகம் மேல் நோக்கி இருந்தால், நீங்கள் பொதுவாக கூட்டத்தில் தனி ஆளாக தெரிய விரும்புவீர்கள். நீங்கள் பாசிடிவ் குணம் கொண்டவர். உங்களை போன்ற குணம் கொண்டவரோடு பழக விரும்புவீர்கள். ஒரு அறையில் பலர் இருந்தால் நீங்கள்தான் அதில் லீடராக அல்லது தனி குணம் கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பேச மாட்டீர்கள். சில விஷயங்களையோ சொன்னாலும் நறுக்குன்னு சொல்லும் குணம் கொண்டவராக இருப்பீர்கள். உங்களை பற்றி நீங்களே உயர்வாக நினைப்பீர்கள். நீங்கள் பெரும்பாலும் மற்றவர்களின் கருத்துக்கள் பற்றி நினைக்காமல் வெளிப்படையாக மனதில் தோன்றியதை பேசுவீர்கள்.

டைப் 2
நீங்கள் ஏதாவது ஒரு பக்கம் திரும்பி தூங்கும் குணம் கொண்டவர் என்றால்.. அதாவது டைப் 2 என்றால் நீங்கள் அமைதியான குணம் கொண்டவர். ஜாலி டைப். நல்ல ஆக்டிவ்வாக இருப்பீர்கள். பலரும் நன்றாக பழகுவீர்கள். எந்த விதமான மோசமான நிலையையும் எளிதாக எதிர்கொள்ள கூடிய குணம் கொண்டவராக இருப்பீர்கள். உங்களை பற்றி நீங்கள் அதிகம் யோசிப்பீர்கள். உங்களை எளிதாக யாரும் கோபப்படுத்த முடியாது. நீங்கள் எப்போதும் பஞ்ச தந்திரம் பார்த்த ஆடியன்ஸ் போல சிரித்த முகமாக இருப்பீர்கள்.

டைப் 3
ஒருவேளை நீங்கள் உடலை குறுக்கி, முதுகு வளைத்து தூங்கும் குணம் கொண்டவர் என்றால்.. .. நீங்கள் பொதுவாக மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்ப்பீர்கள். அதாவது மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ள வேண்டும். உங்களை பற்றி கவனிக்க வேண்டும், உங்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புவீர்கள். அதாவது செல்வராகவன் பட ஹீரோ போல. நீங்கள் கொஞ்சம் குழந்தை மாதிரி. அதே சமயம் கோபம் வந்தால்.. அக்னி நெஞ்சில் குமுறும் எரிமலையாக மாறிவிடுவீர்கள். நீங்கள் பெரிதாக மற்றவர்களை நம்ப மாட்டீர்கள்.

டைப் 4
நீங்கள் ஒருவேளை குப்புற படுக்கும் குணம் கொண்டவர் என்றால், நீங்கள் வலிமையானவர். ரிஸ்க் எடுப்பீர்கள். கடினமான முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் பிறப்பிலேயே ஒரு லீடர். நீங்கள் கொஞ்சம் சந்தேக குணம் கொண்டவர். எளிதில் யாரையும் நம்ப மாட்டீர்கள். பெரிதாக உங்களின் கருத்துக்களை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் நீங்கள். உங்களை நம்ப வந்தவர்களை கைவிட மாட்டீர்கள். பார்க்க கொஞ்சம் முரடர் போல இருந்தாலும்.. கேஜிஎப் சுரங்கத்தில் எடுத்த தங்கம் பல சுத்தமான டைப் நீங்க!












Click it and Unblock the Notifications