Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த அஸ்திரத்தையே எடுத்த எடப்பாடி.. ஒன்றல்ல.. மொத்தம் மூன்று 'பெரும் சிக்கல்கள்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக இடையிலான கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுகிறது. இந்த சூழலில் ஒரு பக்கம் ஓபிஎஸ், மறுபக்கம் திமுக, இன்னொரு பக்கம் பாஜக என மூன்று பெரும் பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதை சமாளிக்க திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எடப்பாடி பழனிசாமிக்கு அப்படி என்ன மூன்று பிரச்சனைகள் என்பதை இப்போது பார்ப்போம். முதல் பிரச்சனை இதுதான்.. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக மாறினாலும், அவர் அதிமுகவில் வலுவான தலைமையாக உருவெடுத்தாலும் இன்னமும் கட்சி விஷயத்தில் பிரச்சனை இருக்கவே செய்கிறது.

எத்தனை முறை நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும்,மீண்டும் மீண்டும் வழக்கு போட்டு ஓ பன்னீர்செலவம் குடைச்சல் கொடுத்து வருகிறார். நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த முறையீடுகள் தொடரும் என்பதால், எடப்பாடிக்கு, ஓ பன்னீர்செல்வத்தின் குடைச்சல் இருந்து கொண்டேதான் இருக்கும்.

எடப்பாடி பெயர்

எடப்பாடி பெயர்

இரண்டாவது பிரச்சனை, கோடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் அடிக்கடி எடப்பாடி பழனிசாமியின் பெயரை இழுத்து வரும் திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர் மீதுமே எப்படியாவதுஊழல் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதிமுக தலைவர்களுக்கும் அவருக்கும் நடக்கும் இந்த பிரச்சனைகளை கையாள்வது இரண்டாவது பெரிய பிரச்சனையாக இருக்கும்,.

அதிமுக

அதிமுக

மூனறாவது பிரச்சனை பாஜகவிடம் இருந்து அவருக்கு இருக்கிறது. அதிமுக தலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியால் முழுமையாக சந்தோஷப்பட முடியாத நிலையே இருக்கிறதாம்.ஏனெனில் அதிமுகவின் லகானை தன் வசம் இருப்பதையே பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிமுகவை பாஜக பிடியில் இருந்து வெளியேற்றுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதை எல்லாம் சமாளிக்க அதிமுக பொதுச்செயலாளராக மாறிய எடப்பாடி பழனிசாமி கட்சி ரீதியாக இன்னமும் பலமாக விரும்புகிறாராம். கட்சிக்குள் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத அளவிற்கு ஜெயலலிதா போல் வலுவான ஒற்றை தலைமையாக உருவெடுக்க விரும்புகிறாராம் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள் உள்ள சீனியர்களை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சில முயற்சிகளை செய்வார் என்கிறார்கள். அதற்காக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அமைப்பு ரீதியாக குறைக்க வாய்ப்பு உள்ளதாகவும், மாவட்ட செயலாளர்களை மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி விருப்பம்

எடப்பாடி விருப்பம்

அதேபோல் தனது ஆதரவாளர்களை அதிக அளவு பதவிக்கு கொண்டுவர விரும்புகிறாராம். பல்வேறு புதிய முகங்களுக்கு போட்டியிட கடந்த முறை எடப்பாடி வாய்ப்பு கொடுத்திருந்தார். அதில் சிலர் வெற்றியும் பெற்றிருந்தார்கள். சிலர் வெற்றிக்கோட்டை நெருங்கி வந்து தோல்வியை தழுவினார்கள் அவர்களுக்கு எல்லாம் இந்த முறை அதிக வாய்ப்பு கொடுக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம்.

ஒருவருக்கு ஒரு பதவி

ஒருவருக்கு ஒரு பதவி

மேலும் கட்சிக்குள் ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தையும் முன்னெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில் வலுவான தலைமையாக முழுமையாக உருவெடுத்துவிட்டால், பாஜக, திமுகவை சமாளிப்பது எளிதாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். அதற்கு அடுத்த சில மாதங்களில் அதிரடியான முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது எனகிறார்கள் அரசியல் வட்டாரத்தில்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+