ஆஹா.. "மண்டை மேல இருக்கிற கொண்டைய மறந்த" ராஜேந்திர பாலாஜி.. சிக்கியது இப்படித்தான்..!

ராஜேந்திர பாலாஜி எப்படி போலீசில் சிக்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 வாரங்களுக்கும் மேலாக போலீஸாரின் பிடியில் சிக்காமல் தப்பித்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இறுதியில் எப்படி வசமாக சிக்கினார் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன.

மோசடி குற்றச்சாட்டு தொடர்பான புகார் வழக்கு தீவிரமாகும் முன்பேயே மெல்ல தன்னை மறைத்து கொள்ள ஆரம்பித்தார் ராஜேந்திர பாலாஜி.

ஸ்காட்லாந்து புலனாய்வு போலீஸுக்கு இணையாக பேசப்படும் தமிழக காவல்துறையினர், தொழில்நுட்பம் அதீத வளர்ச்சிப் பெற்றிருக்கும் இந்த காலக்கட்டத்தில் பிரபலமான ஒருவரை பிடிக்க முடியாமல் திணறகிறதே என்று சோஷியல் மீடியாவில் பல்வேறு கிண்டல் கேலிகள் நிறைந்த பதிவுகளும் 15 நாட்களுக்கும் மேலாக வெளியாகி கொண்டே இருந்தன.

சுப்ரீம்கோர்ட்

சுப்ரீம்கோர்ட்

காவல்துறைக்கு பெருத்த அவமானமாக போயிற்று.. போலீசார் மீதே இது சந்தேகத்தன்மையையும் ஏற்படுத்தியது.. அதனால்தான், ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருக்கும் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பேயே அவரை கைது செய்ய வேண்டும் என்று தமிழக உள்துறையிலிருந்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு கண்டிப்பாக உத்தரவிடப்பட்டது..

சிக்கல்

சிக்கல்

இதையடுத்து, அவரை கைது செய்ய வேண்டிய நெருக்கடியும் போலீசுக்கு ஏற்பட்டது.. ஒரு வழியாக பெங்களூருவில் அவரை கைதும் செய்துவிட்டனர். இப்போது அவர் எப்படி போலீசில் சிக்கினார் என்ற தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. முன்னதாக, போலீசாரிடம் சிக்காமல் இருக்க ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா எல்லை பகுதியில் அடர்ந்த மலைச்சார்ந்த கிராம பகுதிகளை தேர்ந்தெடுத்தார்...

சுங்கச்சாவடி

சுங்கச்சாவடி

காரணம், தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றால் செக் போஸ்ட்களில் சுங்கசாவடியில் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால்தான் பிரதான சாலைமார்க்கங்களை அவர் தவிர்த்துள்ளார்.. மாறாக, கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள ரோடுகளையே தேர்ந்தெடுத்துள்ளார்.. அப்படித்தான், காரில் சுற்றிக்கொண்டே தலைமறைவாக திரிந்துள்ளார்.

தனிப்படை

தனிப்படை

பெங்களூரில் எங்கேயோ மறைவாக உள்ளார் என்ற தகவல் கிடைக்கவும் போலீசார் அங்கு பறந்தனர்.. இதற்கு பிறகு, விருதுநகரில்தான் தங்கியிருக்கிறார் என்ற தகவல் வரவும், சொந்த மாவட்டத்துக்கும் போலீசார் சென்று தேட ஆரம்பித்தனர்.. இறுதியாகத்தான், ஓசூர், கர்நாடகா பகுதிகளில் காரில் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. எனவே, தனிப்படை போலீசார் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போலீசார் கர்நாடகா போலீசாரின் உதவியை நாடி, ராஜேந்திர பாலாஜியை பிடிக்க பிளான் போட்டுள்ளனர்..

ஆபத்து

ஆபத்து

ஆனால், இந்த தகவலும் ராஜேந்திர பாலாஜிக்கு கிடைத்துவிட்டது.. அதனால், ஓசூரில் இருந்தால் ஆபத்து என்று நினைத்து, கர்நாடகாவுக்கு ரூட்டை மாற்றி உள்ளார்.. இதையறிந்த போலீசார், அவரது செல்போன் சிக்னலை ஆராய்ந்தனர்.. அப்போது அவர் கர்நாடகத்துக்குள் நுழைந்துள்ளதையும் உறுதி செய்தனர்... ஆனால் அங்கு செல்வதற்குள் ராஜேந்திர பாலாஜியின் செல்போன் சிக்னல் கட் ஆகிவிட்டது.. இதனால் அவர் எங்கிருக்கிறார் என்ற அடுத்த குழப்பமும், சிரமமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊருக்குள் அவரை தேட ஆரம்பித்தனர்.

 டிராபிக் ஜாம்

டிராபிக் ஜாம்

இப்படிப்பட்ட சூழலில்தான், ராஜேந்திர பாலாஜி வெள்ளை கலர் காரில் ஹாயாக சென்று கொண்டிருந்தார்.. அப்போது திடீரென அவரது காரின் பின்பக்க சக்கரத்தில் இருந்த வெள்ளை கலர் பிளேட் காணாமல் போயிருந்தது.. இந்த விஷயம் ராஜேந்திர பாலாஜிக்கு தெரியாது.. ஹசன் மாவட்டம் சைகிலேஷ்பூர் பகுதியில் காரில் சென்றபோது சாலையில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது..

தலைமறைவு

தலைமறைவு

அப்போது அங்கிருந்த டிராபிக் போலீசார்தான், ராஜேந்திர பாலாஜி சென்ற காரின் பின்புற சக்கரத்தில் இருந்த வெள்ளை நிற பிளேட் மாயமானதை பார்த்தனர்... அதனால் அந்த காரை உடனே போலீசார் நிறுத்தினார்கள்.. அப்போதுதான் காரில் இருந்தது ராஜேந்திர பாலாஜி என்பதே அவர்களுக்கு தெரியவந்துள்ளது.. உடனே அங்கிருந்து ஜம்ப் ஆகி நண்பர் வீட்டுக்கு தப்ப முயன்றுள்ளார்.. அப்போதுதான் போலீசில் சிக்கி உள்ளார்.. இதுதான் ராஜேந்திர பாலாஜியின் 18 நாட்கள் தலைமறைவு வாழ்க்கையாகும்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+