Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரும்பி வந்து தாக்கும் அம்புகள்.. தேசிய அளவில் சொதப்பிய பாஜக பிளானிங்.. தொட்டதெல்லாம் உடையுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் 2024ல் பாஜக சார்பாக போடப்பட்ட பல்வேறு திட்டங்கள் அந்த கட்சிக்கே எதிராக திரும்ப தொடங்கி உள்ளன. கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களை போல இல்லாமல் இந்த முறை பாஜக திட்டமிடலில் கடுமையாக சொதப்ப தொடங்கி உள்ளது.

நாடு முழுக்க இதுவரை இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்துள்ளன. மூன்றாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. இன்றோடு மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிய உள்ளன.

How few things have become a boomerang for BJP in lok sabha election 2024

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (UTs) பரவியுள்ள 95 இடங்களுக்கு மக்களவைத் தேர்தல் 2024-ன் கட்டம் 3-ல் வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சில முக்கியப் பெயர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அடங்குவார். முன்னாள் பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டிம்பிள் யாதவ், சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சுப்ரியா சுலே போன்ற முக்கிய தலைவர்கள் இந்த தேர்தலில் 3ம் கட்டத்தில் இந்த முறை போட்டியிடுகின்றனர்.

பாஜகவின் கோட்டையான குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கோவாவின் 2 தொகுதிகளிலும் மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதேபோல் கர்நாடகாவின் 14 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடகா 28 உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புகிறது. மாநிலத்தின் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் மீதமுள்ள கர்நாடகாவின் 14 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது.

பாஜகவிற்கு எதிராக திரும்பிய திட்டமிடல்: லோக்சபா தேர்தல் 2024ல் பாஜக சார்பாக போடப்பட்ட பல்வேறு திட்டங்கள் அந்த கட்சிக்கே எதிராக திரும்ப தொடங்கி உள்ளன. கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களை போல இல்லாமல் இந்த முறை பாஜக திட்டமிடலில் கடுமையாக சொதப்ப தொடங்கி உள்ளது.

பொதுவாக பாஜகவின் திட்டமிடல் தேர்தல் நேரங்களில் விறுவிறுப்பாக இருக்கும். முக்கியமாக எதிர்க்கட்சிகளுக்கு இடமே கொடுக்காமல் பாஜகவின் திட்டமிடல் இருக்கும். ஆனால் முக்கியமான சில விஷயங்கள் இந்த முறை பாஜகவிற்கே எதிராக சென்றுள்ளன.

1. காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியில் காங்கிரசின் இடஒதுக்கீடு பிளான், சாதி கணக்கீடு போன்ற பிளானும் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இது பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும், என்று கூறியது பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

2. பிரதமர் மோடியே இஸ்லாமியர்களை விமர்சனம் செய்யும் வகையில், இஸ்லாமியர்களை பற்றி தாக்கும் வகையில் பேசியது பாஜக கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது. பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் பற்றி மேடைக்கு மேடை பேசுவது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் வாக்குறுதி குறித்தோ, 10 ஆண்டுகள் சாதனை பற்றியோ பேசாமல் மோடி திடீரென இஸ்லாமியர்களுக்கு எதிரான புதிய பிரச்சார வியூகத்தை கையில் எடுத்து இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

3. பாஜக கட்சிக்கு ஒரு காலத்தில் ஆதரவாக இருந்த ராஜபுத்திரர்கள் ஆதரவு பூமராங் போல அந்த கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது. பீகார், குஜராத், உத்தர பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை கவலைக்குரியதாக மாறி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்து வாக்குகளால் பெரும்பான்மை இடங்களை வென்ற குஜராத், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை மோசமாக மாறி உள்ளது.


4. ரேவண்ணா புயல்: கர்நாடகா தேர்தலை மட்டுமின்றி.. இந்தியாவையே உலுக்கி உள்ள ரேவண்ணா செக்ஸ் வீடியோ விவகாரம் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக கட்சிக்கு ஏற்கனவே எச்சரிக்கை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன், எச் டி ரேவண்ணாவின் மகன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் வீடியோக்கள் வடஇந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளன.

5. லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் முன்னிலை வகிப்பது பாஜகவிற்கு இமேஜ் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+