கைது உத்தரவு இருக்கட்டும்! அமெரிக்க நீதிமன்ற முடிவால் அதானிக்கு ராட்சச சிக்கல்! இதுதான் முக்கியமே
சென்னை: அமெரிக்க நீதிமன்றம்.. கவுதம் அதானிக்கு பிறப்பித்துள்ள கைது வாரண்டு உத்தரவு காரணமாக அவருக்கும் , அவரின் அதானி குழுமத்திற்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
முதலில் சிக்கல் குறித்து பார்க்கும் முன்.. நியூயார்க் நீதிபதிகள் பிறப்பித்த கவுதம் அதானி கைது வாரண்டு காரணமாக அவர் கைது செய்யப்பட வாய்ப்பு குறைவு. ஏன் வாய்ப்பு இல்லை என்று கூட கூறலாம்.

அதானி விவகாரத்தில் அமெரிக்கா அவரை கைது செய்ய இந்தியாவிடம் ஒப்பந்தமோ அனுமதியோ பெற வேண்டும். அதற்கு இந்திய அரசு அனுமதி கொடுக்காது. இது பாஜக - அதானி நட்பு என்பதை தாண்டி.. இந்தியர் குடிமகன் ஒருவர்.. இந்திய பணக்காரர் ஒருவரை அமெரிக்கா நாடு கடத்த இந்தியா அனுமதிக்காது. அது அதானி என்று இல்லை.. யாராக இருந்தாலும்.
இதை மீறி அதானியை கைது செய்ய வேண்டும் என்றால்.. அமெரிக்கா சட்ட விரோதமாக நாடு கடத்தலாம். ஆனால் அது இருநாட்டு பிரச்சனையாக முடியும். முக்கியமாக இரண்டு நாட்டு வெளியுறவு பிரச்சனையாக முடியும். அதுவே அதானி அமெரிக்கா போகும் பட்சத்தில்.. அமெரிக்காவுடன் கைது நடவடிக்கைகளில் ஒப்பந்தம் செய்துள்ள கனடா போன்ற நாடுகளுக்கு செல்லும் பட்சத்தில் அமெரிக்கா அவரை கைது செய்யலாம். ஆனால் இதுவும் ரிஸ்க்தான்
கைது இல்லை என்றால் என்ன சிக்கல்: அதானி கைது செய்யபட வாய்ப்பு இல்லை என்றால் என்ன சிக்கல் என்று சிலர் கேட்கலாம். ஆனால் வேறு சிக்கல் உள்ளது. அதானி அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பொய் சொல்லி.. அவர்களின் பணத்தை லஞ்சம் தர பயன்படுத்திவிட்டார் என்பதே வழக்கு.
1. இதனால் இனி அதானி குழுமத்தில் அந்நிய முதலீடுகள் வருவது கஷ்டம்.
2. முக்கியமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீடுகள் வராது.
3. இதுவரை வந்த முதலீடுகள் கூட வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
4. இதனால் பங்குசந்தையில் பெரிய அளவில் அதானிக்கு சிக்கல் ஏற்படும்.
5. இப்போது 5 மணி நேரத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ₹3 லட்சம் கோடி வரை சரிந்து உள்ளது.
6. இது இப்போதைக்கு முடியாது உலகம் முழுக்க அவரின் முதலீட்டாளர்கள் வெளியேறுவார்கள் என்பதால் இந்த சரிவு தொடங்கும்.
7. முதலீடு வெளியேறினால்.. பங்குகள் சரியும்.. அதனால் தொடர் விளைவாக அவர்களின் பணிகளும் சரியும்.
வழக்கு என்ன?: லஞ்சம் தர முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2100 கோடி ரூபாய் முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளது. 2023ம் தேதி இது தொடர்பாக அமெரிக்க எப்பிஐ கவுதம் அதானி உறவினர் சாகர் அதானி நியூயார்க் வீட்டில் ரெய்டு செய்தது குறிப்பிடத்தக்கது.
250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது . கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பின்னணி: கவுதம் அதானி ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். அமெரிக்கா முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாக.. அவர்களிடம் உண்மைகளை மறைத்துவிட்டதாகவே அதானி மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் அவரின் Adani Green Energy Ltd 12 கிகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் திட்டத்தில் கையெழுத்து போட்டு உள்ளது. இதற்காக பல கோடிகளை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு தந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்த அமெரிக்க நிறுவனங்களிடம் அதை மறைத்து .. 265 மில்லியன் டாலரை அதானி குழுமம் லஞ்சமாக கொடுக்க முயன்றதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரில் உள்ள முக்கியமான விஷயம், சோலார் திட்டத்திற்காக அமெரிக்க நிறுவனங்கள் செய்த முதலீட்டு பணத்தை லஞ்சமாக அதானி இந்திய அதிகாரிகளுக்கு தந்துள்ளார். அதாவது அமெரிக்க நிறுவனங்களின் செலவில்.. அதானி லஞ்சம் தந்துள்ளார் அல்லது தர முயன்று உள்ளார் என்று புகாரில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications