50% நெருங்கிய ஆதரவு.. தவெகவில் விஜயின் செயல்பாடு எப்படி உள்ளது? சத்தியம் டிவி சர்வே ரிசல்ட் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் கட்சி தொடர்பான நடிகர் விஜயின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு சத்தியம் டிவி கருத்து கணிப்பில் சுமார் 50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். 2026ல் தமிழகத்தில் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடிகர் விஜய் வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளார்.

vijay tvk

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் அக்டோபர் 27 ம் தேதி முதல் அரசியல் மாநாடு நடந்தது. இதில் பல லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில் தான் நடிகர் விஜயின் அரசியல் வருகையால் 2026 தமிழக சட்டசபை தேர்தல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் விஜயின் கட்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும். நடிகர் விஜயின் அரசியல் வருகையை மக்கள் எப்படி பார்க்கின்றனர்? என்பது பற்றி சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவம்பர் 15 தொடங்கிய சர்வே 21 நாட்கள் நடந்தது. இந்த சர்வேயை பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என்று 110 பேர் மேற்கொண்டனர். அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

அதில் கட்சி தொடர்பாக டிகர் விஜயின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு இருந்தது. இதில் திருப்தி என்று 48 சதவீதம் பேர் கூறியுள்ளனர். திருப்தி இல்லை என்று 14 சதவீதம் பேரும், பரவாயில்லை என்று 29 சதவீதம் பேரும், ஒன்றுமில்லை என்று 9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி பார்த்தால் கட்சி தொடர்பாக விஜயின் செயல்பாடுகள் திருப்தி என்று 48 சதவீதம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் விஜய் கட்சியின் கொள்கைகள் எப்படி இருக்கிறது? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு சிறப்பு என்று 45 சதவீதம் பேரும், மோசம் என்று 7 சதவீதம் பேரும், பழைய பல்லவி என்று 29 சதவீதம் பேரும், கருத்து இல்லை என்று 19 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+