Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை விரைவில் சசிகலா கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக ஒரு செய்தி கசிந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி கடுமையான அப்செட்டுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

சமீப காலமாகவே, எடப்பாடி பழனிசாமி விஷயத்தில் அளவுக்கு அதிகமான பொறுமையை கையில் எடுத்து வருகிறார் சசிகலா .. அதேசமயம், எடப்பாடியை தன் பக்கம் இழுத்து வரும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்..

இதனிடையே, தொண்டர்கள், நிர்வாகிகளை பலப்படுத்தியும் வருகிறார்.. அவர்களையும், அதிமுகவின் அதிருப்தி தலைவர்களையும் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.. இதற்காகவே சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

 அதிகரிப்பு

அதிகரிப்பு


அந்த வகையில், சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.. சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்த்தாலே அணைத்து பிரச்னைகளும் முடிந்துவிடும் என்று பலர் குரல் எழுப்பி வந்தாலும், அதிமுகவில் இதற்கு ஆதரவும் உள்ளது.. எதிர்ப்பும் உள்ளது.. இந்நிலையில் சசிகலாவை சேலம் நிர்வாகிகள் சென்று நேரில் சந்தித்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை எடப்பாடி பழனிசாமிக்கு தந்து வருகிறது.

 ஆலோசனை

ஆலோசனை

எடப்பாடி ஏரியாவில் கூட்டம் நடத்தி தொண்டர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனின் யோசனையாக இருப்பதாகவும், அதனாலேயே இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார் சசிகலா என்றும் ஒரு தகவல் கடந்த வாரம் கசிந்த நிலையில், சேலம் நிர்வாகிகளே, சசிகலாவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்... இனி அடுத்து என்ன நடக்கும்? சசிகலாவை சந்திப்பவர்களை எல்லாம் கட்சியை விட்டு நீக்குவது ஒன்றுதான் அதிமுகவின் முடிவாக இருக்கிறதா? என்ற கேள்விகளை அரசியல் நோக்கர்கள் சிலரிடம் முன்வைத்தோம். அவர்கள் சொன்னதாவது:

 எடப்பாடி சுரேஷ்

எடப்பாடி சுரேஷ்

"அதிமுகவை சேர்ந்தவர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கக் கூடாது என்று எடப்பாடி தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள்.. இதற்காகவே, ஒரு மாதமாகவே கட்சி நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து பேசி வந்து கொண்டிருக்கிறார்.. அண்ணன் உங்களுக்கு என்ன வேணாலும் பண்ணுறேனு சொல்றாரு... நீங்க சசிகலா வந்தால், நேரில் போய் பார்க்ககூடாது, ஆதரவு தரக்கூடாது, ஒருவேளை அப்படி செய்தால், கட்சி நடவடிக்கை எடுக்கும்" என்று சொல்லி வந்துள்ளனர்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அப்படி இருந்தும்தான், எடப்பாடி சுரேஷ் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சசிகலா வீட்டிற்கே போய் சந்தித்துள்ளனர்.. இவர்களில் பெரும்பாலானோர் அதிருப்தியாளர்களே.. எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்டவர்களே.. புதுசா வந்தவங்களுக்கும், கட்சியை பற்றி தெரியாதவர்களுக்கும் தரும் முக்கியத்துவம் கூட, சீனியர்களுக்கு எடப்பாடி தருவதில்லை என்ற பேச்சுதான் தற்போது அதிகமாக உள்ளது.. இவர் மட்டும் தலைமை கழக செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், இணை ஒருங்கிணைபாளர், இப்படி எத்தனையோ பொறுப்புகளை வைத்திருப்பது சரியா? என்பதே அதிருப்தியாளர்களின் கேள்வி.

 எடப்பாடி அப்செட்

எடப்பாடி அப்செட்

கட்சி நிர்வாகிகளை எடப்பாடி மதிப்பதில்லை என்றும் புலம்புகிறார்கள்... எப்படி பார்த்தாலும் தென்மண்டலத்தில் சசிகலாவுக்கு ஆதரவு பெருகி கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி தரப்பு, தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளை சந்தித்து கேன்வாஸ் செய்வதைவிட, கூட்டத்தை கூட்டி அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும்.. ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்று இருக்கிறதே, அது எதற்காக உள்ளது? மேல்மட்ட அளவிலேயே தலைவர்களை சந்தித்து பேசி கொண்டிருந்தால், கட்சி எப்படி வளரும்?

 அதிமுக கருத்து

அதிமுக கருத்து

தொண்டர்கள்தான் அதிமுகவின் பலம்.. அதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு கீழிறங்கி வந்து அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும்.. இதைதான் சசிகலா 4 மாதமாகவே சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.. அதிமுக என்ற ஆலமரத்தின் வேரை பலப்படுத்தி வருகிறார்.. அதை எடப்பாடி தவறவிட்டுவிட்டார் என்றே தெரிகிறது" என்றனர்.

 எடப்பாடி ஆதரவாளர்கள்

எடப்பாடி ஆதரவாளர்கள்

இதே கேள்விகளை எடப்பாடி தரப்பினரிடம் நாம் கேட்டதற்கு அவர்கள் சொல்லும்போது, "ஒருசிலர் சசிகலாவை சந்தித்து பேசியதாலேயே, அதிமுகவே சரண்டர் என்று அர்த்தம் கிடையாது.. ஆதாயம் இல்லாதவர்கள் அவரை சென்று சந்திக்கிறார்கள், அவ்வளவுதான்.. மற்றபடி அதே மேற்கு மண்டலத்தில் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருக்கவே செய்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகிறது.. விரைவில் அதிருப்தியாளர்களை எடப்பாடி சந்தித்து பேசக்கூடும்" என்றார்கள்.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

அமமுக தரப்பினரிடம் இதை பற்றி நாம் கேட்டதற்கு, "அமமுகவுக்கு சசிகலா ஆதரவு தர முடியாது.. அப்படி தந்துவிட்டால், அதிமுக என்ற பேச்சை கூட அவரால் எடுக்க முடியாது.. கட்சியை மீட்கும் விவகாரத்தில் கோர்ட்டில் வெற்றி பெறுவது சிரமம்.. அப்படியானால் ஒரே வழி தேர்தல்தான்.. அதனால்தான், சசிகலா அத்தனை முறை அறிவுறுத்தியும் தினகரன் அமமுகவை கலைக்காமல் உள்ளார்.. வெற்றியோ, தோல்வியோ, தொடர்ந்து தேர்தலை சந்தித்து கொண்டு இருக்கிறார்.. தினகரன் செல்வதுதான் சரியான ரூட்.. ஜெயிலை விட்டு வந்து ஒரு வருடமாகிறது, அப்படி என்ன செய்துவிட்டார் சசிகலா? வெறும் பேச்சு வேலைக்கு ஆகாது" என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+