இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. குறுக்கே சீனா, அமெரிக்கா.. உலகப்போர் 3 மூளும் அபாயம்? என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் தற்போது பல்வேறு நாடுகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு உள்ளன. இப்போது இந்தியா பாகிஸ்தான் விவகாரமும் இதில் சேர்ந்து உள்ளதால் நாளுக்கு நாள் போருக்கான அபாயம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நாம் 3ம் உலகப்போருக்கு மிக அருகில் இருக்கிறோம். எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று சொன்னால் உங்களுக்கு புரியாது அந்த அளவிற்கு மிக மோசமான நிலைமை உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

Jammu Kashmir

நாம் 3ம் உலகப்போருக்கு மிக அருகில் இருக்கிறோம். எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று சொன்னால் உங்களுக்கு புரியாது அந்த அளவிற்கு மிக மோசமான நிலைமை உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடந்து வருகிறது. கமலா ஹாரிஸின் தவறான முடிவுகள் காரணமாக நமது வெளியுறவுக்கொள்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அவரால் இந்த போரை எல்லாம் நிறுத்த முடியாது, என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

போர் பற்றி எச்சரிக்கை

சமீபத்தில் கூட ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் மூன்றாம் உலகப் போரைப் பற்றி ஒரு கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மோதல்கள் உலகளாவிய போராக விரிவடையும் என்று டிமோன் எச்சரித்து உள்ளார். மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று எச்சரித்து உள்ளார். இந்த மோதல்களைத் தூண்டுவதில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நாடுகள்தான் போருக்கு காரணமாக அமையும்.

உலகளாவிய மோதலின் அபாயம் அதிகரிக்கும் போது, ​​போர் கண்டிப்பாக வரும். அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று எச்சரித்து உள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர், ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் ஆகிய போர்கள் காரணமாக அமெரிக்கா - ரஷ்யா ஆகிய இரண்டு நாட்டு மோதல் உச்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்டு பிரிவினை இதுவரை இல்லாத மிகவும் ஆபத்தான கட்டத்தை அடைந்து உள்ளது என்று ரஷ்ய அதிகாரிகளிடம் ரஷ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து உள்ளாராம். முக்கியமாக பனிப்போரை விட மோசமான சூழலை இரண்டு நாடுகளும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

சீனா - அமெரிக்கா வர்த்தக போர்

சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போரும் கூட.. உலகப்போரை தொடங்கும் அபாயம் உள்ளது. சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத வரியையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் .

ஈரான் அணு மோதல்

அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளை தொடர்ந்து செய்வோம். அதை அமெரிக்காவால் தடுக்க முடியாது. அமெரிக்கா இதில் தலையிட முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணுவை வெறுமனே அணு ஆயுதம் உருவாக்க பயன்படுத்த முடியாது. யுரேனியத்தை அப்படியே எடுத்து அணு குண்டு போட முடியாது. அதை பயன்படுத்தும் முன் செறிவூட்ட வேண்டும். ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். ஆனால் இதில் சிக்கலே.. ஹிஸ்புல்லா இயக்கம் தற்போது சேதங்களை சந்தித்து உள்ளதால்.. அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு சில வாரங்கள் ஏற்படலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான்.. தற்போது தங்களின் புதிய சென்ட்ரிபுகல் அமைப்புகளை ஆக்டிவேட் செய்ய போவதாக அறிவித்து உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

இன்னொரு பக்கம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.

நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம். பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்த வாய்ப்புகள் உள்ளன. சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என் கவுண்டர் செய்யலாம். அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவித்து ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி மொத்தமாக கேம்புகளை அழிக்கலாம்.

கடற்படையை பாகிஸ்தான் அருகே கொண்டு சென்று அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். அதேபோல் ஏவுகணை தாக்குதல், விமான தாக்குதல்களையும் நடத்த முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+