அதிசயம்! வங்கக்கடலில் தொடங்கிய "ஆட்டம்".. கோடைகாலத்தில் எப்படி புயல் உருவாகிறது தெரியுமா? சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், அது கொஞ்சம் கொஞ்சமாக புயலாக மாறி வருகிறது. அது எப்படி புயலாக மாறுகிறது என்று இங்கே பார்க்கலாம்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. நேற்று முதல்நாள் மாலைதான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலிமை அடைந்து வருகிறது.

இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடையும். அதற்கு மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் . அதை தொடர்ந்து வங்கக்கடலில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

How is Mocha Cyclone forming in the Bay of Bengal and How it will affect the weather in Tamil Nadu?

அங்கே எப்படி புயல் உருவாகிறது?

பொதுவாக கோடைகாலத்தில் தமிழ்நாட்டை புயல் தாக்காது. ஒடிஸாவை சில சமயங்களில் தாக்கி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில்தான் தற்போது உருவாகி வரும் மோச்சா புயல் ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லது ஆந்திர பிரதேசம் பக்கம் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. கோடை காலத்தில் இந்த புயல் வங்கக்கடலில் உருவாக பின்வரும் விஷயங்கள்தான் முக்கிய காரணம் ஆகும்.

பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.

அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் என்பதால் இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.

How is Mocha Cyclone forming in the Bay of Bengal and How it will affect the weather in Tamil Nadu?

அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறி இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.

ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.

அதேபோல் மூன்றாவது விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.

வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது கோடைகாலம் என்றாலும் கடந்த வாரம் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

இந்த மூன்று விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும்.

இந்த மோச்சா உருவாவதற்கான ஆட்டம் தற்போது வங்கக்கடலில் தொடங்கிவிட்டது.

How is Mocha Cyclone forming in the Bay of Bengal and How it will affect the weather in Tamil Nadu?

இந்த மோச்சா புயல் மத்திய வங்கக்கடலில் இருப்பதால்.. மேற்கண்ட அனைத்து விஷயங்களும் புயல் உருவாவதற்கான சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. எனவே புயல் உருவாவது உறுதியாகிவிட்டது. ஆனால் இது தமிழ்நாட்டை தாக்குமா என்பது சந்தேகம்தான்.

தற்போது இருக்கும் நிலையில் இதன் பயணத்தை கணிக்க முடியாது என்றாலும் ஒடிசாவில் பெரும்பாலும் தாக்கும். ஒடிசா அல்லது ஆந்திர பிரதேசம் இடையே எங்காவது ஓரிடத்தில் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் வடக்கு ஆந்திர பகுதி அதிகமாக இதனால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+