எப்படி இருக்கிறார் பேராசிரியர் அன்பழகன்...? மருத்துவ வட்டாரம் என்ன சொல்கிறது..?
சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை இரவு சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டதை அடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் வீட்டிலிருந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டார்.
மூன்று நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் சூழலில், அவரது உடல்நிலையில் சொல்லிகொள்ளும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

98 வயது
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வெளிநிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மினி ஹாஸ்பிட்டல் செட் அப் செய்யப்பட்டு அவரை சுழற்சி முறையில் செவிலியர்கள் கவனித்து வந்தனர். அன்பழகனுக்கு 98 வயது நடைபெற்று வரும் நிலையில் கூட, அவரது நினைவுத்திறன் கூர்மையாகவே இருந்து வந்தது. அவரை சந்திக்க வருபவர்களை அடையாளம் கண்டு பேர் சொல்லி அழைத்து பேசுவார்.

ஓராண்டு
கடந்த ஓராண்டுகாலமாகவே அன்பழகன் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு திரவ ஆகாரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தன. அன்பழகனின் மருமகன் மருத்துவர் என்பதால் அவர் மேற்பார்வையில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. மேலும், அவருக்கு தேவையான உதவிகளை நீண்ட காலமாக உதவியாளராக இருந்துவரும் நடராஜன் பார்த்து பார்த்து செய்து வருகிறார். உணவு உட்கொள்ளாமையால் அன்பழகனின் உடல் மெலிந்து தளர்ந்து காணப்பட்டார்.

பதற்றம்
நடமாடமுடியாவிட்டாலும் படுத்த படுக்கையாக இருந்து வந்த அவருக்கு கடந்த திங்கள்கிழமை இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சுவாசிக்க அவர் மிகவும் சிரமப்பட்டதை பார்த்து குடும்பத்தினர் பதற்றம் அடைந்துவிட்டனர். உடனடியாக தாமதமின்றி அப்போலோ மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு சிகிச்சை தொடங்கப்பட்டது. ரெஸ்பிரேட்டரி துறை சார்ந்த மூத்த மருத்துவர்கள் அன்பழகனின் உடல்நிலையை பரிசோதித்து எதையும் தங்களால் உறுதியாக சொல்லமுடியாது என தெரிவித்திருக்கிறார்கள்.

அலைபேசி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று பேராசிரியர் எப்படி இருக்கிறார் என மருத்துவர்களிடம் நலம் விசாரிக்க தவறுவதில்லை. மேலும், அன்பழகன் குடும்பத்தினருக்கு தைரியமும் கொடுத்து வருகிறார். இதனிடையே திமுக மூத்த நிர்வாகிகளான துரைமுருகன், நேரு, வேலு, பொன்முடி, மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர்களுடன் அன்பழகன் உடல்நிலை பற்றி ஸ்டாலின் அவ்வப்போது பேசி வருகிறார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications