செந்தில் பாலாஜிக்கு புஹாரில இருந்து பிரியாணி வருதா.. மகாலட்சுமி கணவர் ரவீந்தர் சொன்ன சீக்ரெட்ஸ்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் எப்படி இருக்கிறார் என்பது குறித்து தயாரிப்பாளரும் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ரூ 16 கோடி மோசடி தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ரவீந்தர். இவர் ஒரு மாதம் சிறையில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

அவர் சிறையில் இருந்த போது தான பட்ட கஷ்டங்களை எல்லாம் விவரித்து வருகிறார். அந்த வகையில் அவர் கூறுகையில் என் அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமிதான் எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து அவரை யாராலும் பிரிக்க முடியாது.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட போது எப்படி உட்காருவ, எப்படி எழுந்திருப்ப என மகாலட்சுமி என்னிடம் கேட்ட கேள்வியால் நான் அப்படியே நொறுங்கி போய்ட்டேன். ஜெயிலுக்கு போனதும் அந்த எவ்ளோ பெரிய கேட்! அதை திறந்ததும் எனக்கு அப்படியே வியர்த்து விறுவிறுத்துவிட்டது. பின்னர் என்னை உள்ளே அழைத்து சென்று மொத்த உடையையும் கழற்றிவிட்டு சோதனை செய்தார்கள்.
நான் டிராக் பேண்ட் அணிந்திருந்தேன். அதில் இருந்த நாடாவை உருவிவிட்டார்கள். சிறை கைதிகள் அந்த சிறிய பொருளை வைத்து கூட தங்களை துன்புறுத்தி கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்களுடைய கடமையை செய்தார்கள். அப்போதே நான் கூனி குறுகிவிட்டேன். போலீஸ்காரர்களும் சற்று சங்கடத்துடன்தான் இருந்தார்கள்.
பின்னர் உள்ளே அழைத்துச் சென்ற போது ஜெயிலர் என்னுடைய மருத்துவ பரிசோதனையை கேட்டார். அதை அந்த போலீஸார் எடுக்கவில்லை. உடனே ஜெயிலர் இப்போதே இவருக்கு வியர்த்துள்ளது. இப்பவே பிபி எடுத்தால் எகிறிதான் காண்பிக்கும். அதனால் சற்று நிதானப்படுத்தி எடுத்தபுக் கொண்டு வாருங்கள் என்றார். அதன்படி இரவு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற நான் அதிகாலை 4 மணிக்கு அழைத்து வரப்பட்டேன்.
சார் மீண்டும் என் ஆடைகளை சோதனை செய்ய போறீங்களா என கேட்டேன். இல்லை என்றார்கள். பின்னர் எனக்கு ஒதுக்கப்பட்ட சிறைக்கு செல்ல ஒன்றரை கி.மீ. தூரம் நடந்தே அழைத்து சென்றார்கள். இதுவரை நான் அவ்வளவு தூரம் எல்லாம் நடந்ததே கிடையாது. ஒரு வழியாக நடந்து சென்று எனக்கான அறைக்குச் சென்றுவிட்டேன்.
அங்கு இந்தியன் டைப் டாய்லெட்டில் உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். இதற்காக 2, 3 பேரை அழைத்தேன். பிறகு அவர்களுக்கு எதற்கு சிரமம் என கருதி நானே தவழ்ந்து தவழ்ந்து நடக்க ஆரம்பித்தேன். எனக்கு சிறப்பு வசதிகள் கிடைக்காமல் போனதற்கு என்னுடைய எதிர் தரப்புதான் காரணம்.

எல்லா பிரபலங்களுக்கும் சிறையில் எல்லா வசதிகளும் கிடைக்கும்னு சொல்வது தவறு. செந்தில் பாலாஜி சாருக்கு புஹாரியில் இருந்து பிரியாணி வருது, அது வருது இது வருதுனு வெளியே பேசிக்கிறாங்க! ஆனால் அவர் ரொம்ப எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். மத்தவங்க ஜெயில்ல என்ன சாப்பிடுகிறார்களோ அதைத்தான் அவரும் சாப்பிடுகிறார். அதுவும் உப்பு சப்பு இல்லாமல் சாப்பிடுகிறார்.
என் தலைவன் டிடிஎஃப் வாசன் சிறைக்குள் வந்ததும் ஜெயிலே கதறுது. குருநாதா இங்கயுமாங்கிற மாதிரி கையில் கட்டோட வந்தார். அவரை தனி சிறையில்தான் வச்சிருந்தாங்க. அங்கயும் போலீஸ்காரர்களை வா செல்லம், போ செல்லம் என சொல்லிகிட்டு இருக்காரு, பைக்கை எரிச்சிடனும்னு நீதிபதி தீர்ப்பு சொன்னதும் உள்ளே இருக்கும் கைதிகள் எல்லாம் கோலாகலமா கொண்டாடுறாங்க என ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார்.
-
கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications