மெசேஜ்.. திமுகவை பற்றி "மேலிடத்தில்" புட்டு புட்டு வைத்த 2 புள்ளிகள்.. டென்ஷனில் "தலைவர்".. போச்சு

வானதியும் குஷ்புவும் நட்டாவிடம் என்ன பேசினார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மீது எக்கச்சக்க கோபத்திலும், அதிருப்தியிலும் பாஜக மேலிடம் இருக்கிறதாம்.. அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன..!

இந்த மாத தொடக்கத்தில், மேற்கு வங்கம், நாடியா மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டு உயிரிழந்தார்.

இந்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரின் மகன் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 பாஜக மேலிடம்

பாஜக மேலிடம்

இது தொடர்பான பல்வேறு சந்தேகங்களும், விமர்சனங்களும், குழப்பங்களும் எழுந்த நிலையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கை விசாரிக்க 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை பாஜக தலைவர் ஜேபி நட்டா உடனடியாக அமைத்தார்.. பாஜக மேலிடமே இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு குழுவை அமைத்தது, மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

 பாஜக அமைத்த குழு

பாஜக அமைத்த குழு

குறிப்பாக, மக்களவை உறுப்பினரும் தேசிய துணைத் தலைவருமான ரேகா வர்மா, உத்தரப் பிரதேச கேபினட் அமைச்சர் பேபி ராணி மவுரியா, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மகளிர் பிரிவு தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன், சிறப்பு அழைப்பாளராக தேசிய செயற்குழு குஷ்பு சுந்தர், மேற்கு வங்காள எம்எல்ஏ. ஸ்ரீரூபா மித்ரா சவுத்ரி ஆகியோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

 2 பெண்கள்

2 பெண்கள்

தேசிய அளவிலான பிரச்சினை குறித்து விசாரிக்க, தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளது தமிழக பாஜக வட்டாரத்தில் பேசுபொருளாகியது.. எனினும், இந்த குழுவினர், கடந்த 15-ம் தேதி மேற்கு வங்கம் சென்று நேரிலேயே ஆய்வு நடத்தினார்கள்.. இறுதியில், நேற்று முன்தினம் தங்களது அறிக்கையையும் நட்டாவிடம் நேரில் அளித்தனர்... அப்போது குஷ்புவும், வானதியும்கூட சென்றிருந்தனர்.

 நட்டா கேட்ட கேள்வி

நட்டா கேட்ட கேள்வி

அறிக்கை தாக்கலுக்கு பிறகு, குஷ்புவிடமும், வானதியிடம், தமிழக அரசியல் நிலவரம் குறித்து நட்டா நீண்ட நேரம் ஆர்வத்துடன் விசாரித்தாராம்.. தமிழகத்தில் புகைந்து கொண்டிருக்கும் அம்பேத்கரையும், மோடியையும் ஒப்பிட்டு, இளையராஜா கருத்து தெரிவித்ததால், தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் செயல்பாடு, திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தெல்லாம் புட்டு புட்டு நட்டாவிடம் வைத்திருக்கிறார்கள்.

 வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

அதுமட்டுமல்ல, பிரதமர் மோடிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் விதைக்க வேண்டும், அதன் வாயிலாக 2024 எம்பி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக நினைப்பதாகவும், தங்களுக்கு எந்த பிரச்னை என்றாலும், மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க, முதல்வர் ஸ்டாலின் நினைப்பதாகவும், வானதியும், குஷ்புவும் நட்டாவிடம் எடுத்து சொன்னார்களாம்..

 முரசொலி பளார்

முரசொலி பளார்

சமீப காலமாக, திமுக அரசை விடாமல் கேள்வி கேட்டு வருவதாலும், விமர்சித்து வருவதாலும், மொத்த கோபமும் அண்ணாமலை மீது திமுகவினருக்கு திரும்பியிருப்பதாகவும், அவருக்குதான் திமுக குறி வைத்துள்ளது, அதிலும் முரசொலியில் அண்ணாமலையை திட்டி தீர்க்காத நாளே இல்லை என்றெல்லாம் லிஸ்ட் போட்டு நட்டாவிடம் இரு பெண் தலைவர்களும் கூறியிருக்கிறார்கள்.

 டெல்லி டார்கெட்

டெல்லி டார்கெட்

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட நட்டா, 2024-ல் திமுக கூட்டணியை வெல்ல, சரியான வியூகம் அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தாராம்.. திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்று, சொல்லி வரும் நிலையில், வரப்போகும் எம்பி தேர்தலுக்கு இப்போதே தமிழக பாஜக தயாராகிவிட்டது.. கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கி வந்தாலும், தேர்தலை எதிர்கொள்ள எந்த மாதிரியான வியூகத்தை கையில் எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு டெல்லியில் இப்போதே கிளம்பிவிட்டது.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+