Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்புட்றா.. சென்னை கூவம் தானா இது! வேறலெவலில் மாறுதே.. எப்படி சாத்தியமானது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரில் கூவம் ஆறு சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை கூவம் சுத்தமாக தொடங்கி உள்ளது ‌

சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்ட்டாங் சாலை, சூளைமேடு ஆகிய இடங்களில் வடிகால் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சென்று சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது. இதுபோல சென்னையில் பல இடங்களில் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் விறுவிறுப்பாக கட்டப்பட்டு வருகின்றன.

சிங்காரமா ஊரு.. இது சென்னையின்னு பேரு ஊரைச் சுற்றி ஓடுதய்யா கூவம் ஆறு.. இந்த பாடல் ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தில் இருக்கும் ‌. இந்த படம் 1987 இல் வெளியானது . அப்போதே சென்னை கூவம் நதி சக்கடையாகவே இருந்தது. சாக்கைடைக்கு மறு வார்த்தையாக கூவம் மாறியது. இந்த 36 வருடத்தில் சென்னையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியை அந்த காலத்தில் வாழ்ந்த யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வளர்ந்து விட்டது. இந்த நகரமயமாக்கல் காரணமாக கூவம் குடிப்பதற்கு மட்டுமல்ல எதற்குமே லாயக்கற்ற நிலைக்கு சென்றது. அடையாறும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.

How is the Chennai Koovam river clean? What is Tamilnadu government doing?

சென்னையில் 20 கிலோ மீட்டர் ஓடும் கூவம் மெரினா கடற்கரை அருகே நேப்பியர் பாலம் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. கூவம் ஆறு திடக்கழிவு மற்றும் சாக்கடைகள் கலப்பால் மோசமான நிலையில் உள்ளது. இதனால் சுகாதாரக் கேடுகள் சென்னையில் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், கூவம் ஆற்றை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு காலக்கட்டங்களில் முயற்சி நடந்து வருகிறது. கூவம் ஆற்றை சுத்தமாக வைப்பதற்கு கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அதற்கான பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதையடுத்து பொதுப்பணித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, ஊரக மேம்பாட்டு இயக்ககம், சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஆகியன கூவம் ஆறு சீரமைப்புப் பணிகளை நடத்தி வருகின்றன.

என்னென்ன பணிகள் நடக்கிறது: சென்னையில் உள்ள பகுதிகளில் கூவம் ஆற்றை தூர்வாருதல், கூவம் ஆற்றின் கரைகளின் எல்லையை நிர்ணயித்தல், ஆக்கிரமிப்புகளை தடுக்க வேலி அமைத்தல், திடக்கழிவுகளை அகற்றுதல், ஆற்றின் இருபுறமும் நடைபாதை, சைக்கிள் பாதை, குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான பூங்காக்கள் அமைத்தல், கூவம் ஆற்றங்கரைகளில் குடியிருந்தவர்களை அப்புறப்படுத்தி அவர்களை மறுகுடியமர்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து தற்போது கூவம் ஆற்றுக்குள் விடப்படும் கழிவுநீரை தடுத்து சேகரித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்கான பணிகள் நடக்கிறது. அதற்காக சென்னை கூவம் ஆற்றின் பகுதிகள் 15 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ரூ.186.19 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேரடியாக கூவம் ஆற்றுக்குள் செல்லும் கசடு மற்றும் கழிவுநீரை இடைமறித்து உரிய சுத்திகரிப்புக்குப்பின் ஆற்றில் வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்படுகிறது.

எங்கெல்லாம் இந்த கழிவுநீர் மறிப்பு வடிகால் அமைக்கப்படுகிறது: நேப்பியர் பூங்கா, சேத்துப்பட்டு ஸ்பெர்ட்டாங் சாலை, நுங்கம்பாக்கம் சாலை, மேத்தா நகர், அண்ணா நகர், லாங்ஸ் கார்டன் சாலை, தெற்கு கூவம் சாலை, அமைந்தகரை, என்.எஸ்.கே.நகர் ஆகிய இடங்களில் கூவம் ஆற்றுக்குள் செல்லும் கழிவுநீரை இடைமறித்து வடிகால் மூலம் சேகரித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று அங்கு சுத்திகரித்து கூவத்திற்குள் வெளியேற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

சூளைமேட்டில் 12 லட்சம் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், லாங்ஸ் கார்டனில் ஒரு கோடி லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், நெற்குன்றத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளும், சேத்துப்பட்டு ஸ்பர்ட்டாங் சாலையில் கூவம் ஆற்றின் கரையோரம் 10 லட்சம் திறன் கொண்ட தொகுப்பு முறை இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் வடிகால் மூலம் சேகரமாகும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு சேகரமாகும் கழிவுநீரின் அளவுகள் மாறினாலும் தரம் சீராக பராமரிக்கப்படுகிறது. மேலும் இதன் இயக்கம் மற்றும் தரம் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்கிறது.

கூவம் ஆற்றுக்குள் விடப்படும் கழிவுநீரை இடைமறித்து சுத்திகரித்து ஆற்றுக்குள் விடுவது ஒரு புறம் எனில், கூவம் ஆற்றுக்குள் குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலும் தடுத்தால் மட்டுமே கூவத்தை நம்மால் சுத்தமாக வைக்க முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+