தமிழ்நாட்டின் ஒரு சின்ன நகரத்திற்கு.. அடிக்கடி ஜாக்பாட் மேல் ஜாக்பாட் அடிக்குதே.. வசந்த காலம்தான்!
சென்னை: தமிழ்நாட்டின் மிக பழமையான நகராட்சிகளில் ஒன்றான மன்னார்குடி தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மன்னார்குடி நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது.
விரைவில் மன்னார்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. மன்னார்குடி நகராட்சியுடன் அஷேசம் (பகுதி), மேலவாசல். நெடுவாக்கோட்டை (பகுதி), கர்னாவூர் (பகுதி), இராமாபுரம் (பகுதி) மற்றும் மூவாநல்லூர் (பகுதி) ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் இப்பகுதிகளுக்குக் கிடைக்கும்.

இதன் மூலம். இம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இப்பகுதிகளுக்குக் கிடைக்கும். மேலும், இவ்வூராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புர பண்புகளையும் கொண்டுள்ளன. 2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை தோராயக் கணக்கெடுப்பின்படி 9,682 ஆகும். மேற்குறிப்பிட்ட 6 ஊராட்சிகளை மன்னார்குடி நகராட்சியுடன் இணைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சரான பின்பு மன்னார்குடிக்கு நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மன்னார்குடி ரிங்ரோடு அமைப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்டம் -1, பகுதி - ஏவின் முதல் டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. மன்னார்குடி மேலவாசல் (தஞ்சாவூர் நெடுஞ்சாலை) முதல் சொக்கனாவூர் வரை (மன்னார்குடி முதல் திருமக்கோட்டை சாலை வரை) ஒரு கட்டமாகவும் மன்னார்குடி முதல் ஒரத்தநாடு, மன்னார்குடி முதல் சேதுபாவசமுத்திரம், மன்னார்குடி முதல் அதிராம்பட்டினம் வரை இன்னொரு கட்டமாக இந்த ரிங் ரோடு அமைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ரிங் ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மன்னார்குடியைச் சுற்றி 22 கி.மீ.க்கு ரிங்ரோடு அமைக்கப்படும். இதற்கான டெண்டர் சில நாட்களில் விடப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம சாலைகளைத் தவிர மூன்று மாநில நெடுஞ்சாலைகளையும் இந்த சாலை இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ரிங் ரோடு அமைக்கப்படும் மிக முக சிறிய நகரமாக மன்னார்குடி மாறி உள்ளது. தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அங்கே பேருந்து நிலையம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் ரிங் ரோடு அமைப்பது மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . முன்மொழியப்பட்ட சுற்றுச் சாலையுடன் கிராமப்புற சாலைகளை இணைப்பதன் மூலம் விவசாய விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு மிக எளிதாக கொண்டு செல்ல முடியும்.
ரிங் சாலை கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டினம் சாலையை இணைக்கும் (மாநில நெடுஞ்சாலைகள் எண். 66); திருவாரூர்–மன்னார்குடி–முத்துப்பேட்டை சாலை (SH எண். 22); மன்னார்குடி–சேதுபாவசமுத்திரம் சாலை (SH எண். 46); மற்றும் மன்னார்குடி–திருமக்கோட்டை–சொக்கனாவூர் சாலை உள்ளிட்ட பிற சாலைகள்; மன்னார்குடி-ஒரத்தநாடு-திருவோணம் சாலை மற்றும் ஒரு சில கிராமப்புற சாலைகளை இது இணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
உத்தேச ரிங்ரோடு மூன்றாம்சேத்தி, பாமினி, அரவத்தூர், ராமாபுரம், கைலாசநாதர் கோயில், நாங்கம்சேத்தி, சேரங்குளம், கொப்பிராலயம், நெடுவாக்கோட்டை, குமாரபுரம், கரிக்கோட்டை, மேலவயல், மூவாநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்கள் வழியாகச் செல்லும்.
பணிகள் நடக்கிறது: சுற்றுச் சாலையுடன் இணைக்கப்படும் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட ஆட்சியர் மு.மதிவாணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து அனைத்து கிராமங்களுக்கும் சென்று திட்டப் பணிகள் குறித்த நேரடித் தகவல்களைப் பெற்றார். மன்னார்குடி நகரில் 73 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் ரூ. 2.75 கோடி. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதோடு இங்கே சிப்காட் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் சிறிய நகரங்களில் ஒன்று என்றாலும் இங்கே சிப்காட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 170 ஏக்கரில் பெரிய சிப்காட் இங்கே அமைக்கப்படும். இது வேளாண் சார்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications