பவன் கல்யாணின் அரசியலையே மாற்றிய போராட்டம்.. அதே ஸ்டைலை ரீமேக் செய்யும் விஜய்.. பக்காவான பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர பிரதேச அரசியலில் பவன் கல்யாண் செய்த போராட்டம் ஒன்று அவரின் அரசியல் வாழ்க்கையை மாற்றியது. தற்போது அதே ஸ்டைலில் விஜய் களமிறங்கி உள்ளார்.

சென்னை சிவானந்தா சாலையில் இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் பேரணி நடத்தப்படுகிறது. மொத்தமாக 16 நிபந்தனைகளுடன் பேரணிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர். அஜித் குமார் மறைவிற்கு நீதி வேண்டி பேரணி நடத்த உள்ளார் விஜய். ஏற்கனவே லாக் அப் மரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பங்கேற்க உள்ளன.

vijay Sivagangai

இந்தப் பேரணியையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாகிகள் கைது

தவெக போராட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்கும் நிலையில் விதியை மீறிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். வேறு மாவட்டங்களில் இருந்து போராட வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையை சேர்ந்த தவெக தொண்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென விதி உள்ளது. ஆனால் அதை மீறி வேலூர், காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று நடக்கும் போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் நிபந்தனையை மீறி வெளி மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட தொண்டர்களை கைது செய்து நடவடிக்கை நடந்துள்ளது.

பவன் கல்யாண் போராட்டம்

ஆந்திர பிரதேச அரசியலில் பவன் கல்யாண் செய்த போராட்டம் ஒன்று அவரின் அரசியல் வாழ்க்கையை மாற்றியது. தற்போது அதே ஸ்டைலில் விஜய் களமிறங்கி உள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு நந்தியாலா பகுதியில் அதிகாலை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என். சந்திரபாபு நாயுடு கைதுசெய்யப்பட்டார். இதை அடுத்து, அவரை ஆதரிப்பதற்காக பவன் கல்யாண் விஜயவாடா நோக்கிச் சென்று போராட்டம் செய்தார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சாலை மார்க்கமாகச் செல்ல முடிவு செய்தபோது, அவரது வாகன அணிவகுப்பு இரண்டு முறை தடுக்கப்பட்டது. ஜீப் மீது அமர்ந்தபடி இவர் வேகமாக சென்ற பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் அதன்பின் இவரின் ராலி தடுக்கப்பட்டது.

இதனால் கல்யாண் தனது வாகனத்திலிருந்து இறங்கி விஜயவாடாவில் உள்ள மங்களகிரி நோக்கி நடந்து செல்ல வேண்டியதாயிற்று. விஜயவாடாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டதால், கல்யாண் அனுமாஞ்சிபள்ளியில் சாலையில் படுத்து போராட்டம் செய்தார். அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றது. மாநில அரசையும், போலீசாரையும் எதிர்த்து அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றதோடு.. அவரின் அரசியலை புரட்டி போட்டது. அதோடு சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் கூட்டணிக்கும், அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கும் காரணமாக அமைந்தது.

அதே ஸ்டைல் போராட்டம்

அங்கே அரசியலை மாற்றிய சம்பவமாக இது பார்க்கப்பட்டது. பவன் கல்யாண் செய்த அதே போராட்டத்தின் பாணியில் தற்போது விஜய் போலீஸ் மற்றும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளார். அதே ஸ்டைலில் நடைபயணம் மற்றும் பேரணி மேற்கொள்ளும் விதமாக இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+