இந்தியா மீது வர்த்தக போரை உறுதி செய்த டிரம்ப்.. தங்கம் விலை தாறுமாறாக உயரப்போகிறது.. கவனம்!
சென்னை: இந்தியா மீதான வர்த்தக வரி உயர்வு ஏப்ரல் 2ம் தேதி அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இந்தியா இறங்கி வந்துவிட்டது.. எங்கள் மீதான வரிகளை குறைக்க போவதாக அறிவித்துவிட்டது என்று டிரம்ப் கூறி உள்ளார். ஆனாலும் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா மீதான வர்த்தக வரி உயர்வு அறிமுகம் செய்யப்படும் என்று கூறி உள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா இந்தியாவின் வரி விதிப்பை விமர்சனம் செய்த நிலையில்.. இந்தியா வரியை குறைக்க தொடங்கி உள்ளது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவிற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

முக்கியமாக இந்திய மார்க்கெட்டில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற தொடங்கி உள்ளன. . இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. இதனால் இந்திய மார்க்கெட்டில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற தொடங்கி உள்ளன.
பங்கு சந்தை சரிவு
மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது. 81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பொருட்களின் விலை தற்காலிகமாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும். பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறையும்.
தங்கத்தின் விலை
இந்தியாவின் பொருளாதாரம் தாண்டி தங்கம் விலையிலும் பாதிப்பு ஏற்படும். இந்தியா மீதான கட்டுப்பாடுகள் காரணமாக தங்கத்தின் விலை இனி வரும் நாட்களில் தீவிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் விலை தீவிரமாக உயரப் போகிறது. ஏற்கனவே சீனா, கனடா ஆகியவை பதிலடி வரிகளை விதித்த காரணத்தால் டாலர் மீதான மதிப்பு குறைந்து உள்ளது. டாலர் மீதான மதிப்பு குறைவதால் பலரும் 22, 24, 18 கேரட் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கம் விலை உயர தொடங்கி உள்ளது.
தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினாள் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
டாலர் மட்டுமன்றி ரூபாயின் மதிப்பும் குறையும். இதனால் மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி செல்வார்கள். இதனால் அதை தேவை அதிகம் இருக்கும். அந்த தேவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டாலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளது. டாலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications