டக்குனு முடிவெடுத்த கல்யாண சுந்தரம்.. "ரத்தத்தின் ரத்தமே" ஆன கதை இதுதான்.. செம விறுவிறுப்பா இருக்கே!
அதிமுகவில் கல்யாண சுந்தரம் இணைந்தது எப்படி என்ற தகவல் கசிந்துள்ளது
சென்னை: பேராசிரியர் கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைந்ததன் பின்னணி அபாரமாக இருக்கிறது.. அதிமுக மிக சாதுர்யத்துடன் இந்த விஷயத்தை முடித்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பேராசிரியர் கல்யாண சுந்தரம்.. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்.. சிறந்த பேச்சாளர். தமிழகம் முழுக்க பிரகாசமாக தெரிந்த நபர்.
அடிப்படையில் இவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தவர்.. பிறகுதான் நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமானவராக உயர்ந்தார்.. கிட்டத்தட்ட 11 வருஷம் சீமானுடனே பயணித்து வந்துள்ளார்.

பேட்டிகள்
இவரது பல பேச்சுக்களும், பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் பெரிதும் கவர்ந்து வருபவை.. அதேபோல, டிவி விவாதங்களில் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு லெப்ட் & ரைட் வாங்கிவிடுவார்.. திமுக, உட்பட எந்த கட்சி பிரமுகர்களாக இருந்தாலும், கல்யாண சுந்தரம் தன்னுடைய கேள்வியினால் அவர்களை திணறடித்து விடக்கூடியவர்.

அதிமுக
இப்படி ஒரு வலுவான நபர், அதுவும் தேர்தல் சமயத்தில், அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.. நேற்று முன்தினம் அதிமுகவில் இணைந்தும் விட்டார்.. நேற்று, செய்தியாளர்களிடம் ஏன் அதிமுகவில் இணைந்தேன் என்று ஒரு விளக்கமும் அளித்துவிட்டார்.. இந்நிலையில், கல்யாண சுந்தரம் எப்படி அதிமுகவில் இணைந்தார் என்ற ஒரு தகவல் கசிந்து வருகிறது.

முயற்சி
அதாவது, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியபிறகு சொந்தமாக ஒரு கட்சியை இவர் தொடங்க போவதாக செய்திகள் வந்தன.. அதற்கான வேலைகளிலும் இவர் ஈடுபட்டு கொண்டிருந்தபோதுதான், இந்த தகவல் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு தெரிந்துள்ளது.. அதன்பிறகு, கல்யாண சுந்தரத்தை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் அமைச்சர் இறங்கினார்.

கல்யாண சுந்தரம்
ஆனால், கல்யாண சுந்தரம் இதற்கு எடுத்தவுடன் மறுப்புதான் சொன்னாராம்.. ஒதுங்க நினைத்துள்ளார்.. அதனால், அமைச்சரே நேரடியாக கல்யாணசுந்தரத்தை அணுகி உள்ளார்.. அப்போது ஒரே ஒரு கண்டிஷனைதான் கல்யாண சுந்தரம் முன்வைத்தாராம்... அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி என்பதுதான்.. அதற்கு அமைச்சர் உடனே ஓகே சொல்ல, பிறகு அதிமுக தலைமையை சந்திக்க வைக்க.. அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன.

சுனில் டீம்
இந்த இணைப்பு நிகழ்ச்சியில் சுனில் டீமுக்கு பங்கு இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆக, 2 விஷயம் தெரிகிறது.. ஒன்று, கல்யாண சுந்தரம் கோவை பகுதியை சேர்ந்தவர் என்பதால், கொங்குவை வலுவாக்கும் தளம் வலுவாகி உள்ளது.. மற்றொன்று, அதிமுகவை நம்பி சென்றால், அவர்களுக்கு உரிய பொறுப்பும், பதவியும் தந்து மேலிடம் அழகு பார்க்கும் என்றும் தெரிகிறது.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications