SIR பணி பிரஷர்.. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊழியர்கள் தற்கொலை.. இதுவரை எத்தனை பேர்? ஷாக் தகவல்
சென்னை: தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், மேற்க வங்கம் உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் பணி சுமையால் அரசு ஊழியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகின்றனர். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பலரும் தற்கொலை செய்து வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR or Special Intensive Revision) பணி நடந்து வருகிறது. வாக்காளர்களாக இருப்போர் அதற்கான படிவங்களை வாங்கி முறையாக பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். அப்போது தான் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும். இல்லாவிட்டால் ஓட்டுரிமை என்பது இருக்காது.

நம் நாட்டில் கடந்த 2002-2003ம் ஆண்டுக்கு பிறகு இந்த பணி தொடங்கி உள்ளது. போலி வாக்காளர்களை கண்டுபிடித்து அவர்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கையாக இந்த பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. பீகாரில் இந்த பணி முழுவதுமாக நடந்து முடிந்துவிட்டது.
இதையடுத்து 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த 4ம் தேதி இந்த பணி தொடங்கியது. அதன்பி சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மொத்தம் 51 கோடி வாக்காளர்களின் உரிமையை சரிபார்க்கும் பணி பிஎல்ஓ எனும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்னறர். இந்த பணி டிசம்பர் 4 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சிகள் இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல லட்சம் பேரின் வாக்குரிமை இதன் வாயிலாக பறிக்கப்படும் எனக்கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா உள்பட பல மாநிலங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.SIR பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு டார்க்கெட் மற்றும் பணி சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க SIR பணியில் உள்ள ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தங்கள் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் ஜாகிதா பேகம். இவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தான் ஜாகிதா பேகம் நேற்று தூக்கில் பிணமாக தொங்கினார். முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால் ஜாகிதா பேகம் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதற்கு முன்பாக கடந்த 17 ம் தேதி கேரளாவின் கண்ணூரை சேர்ந்தவர் அனிஷ் ஜார்ஜ் (வயது 44) தற்கொலை செய்தார். அரசு பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்த இவர் பிஎல்ஓவாக பணியாற்றி வந்தார். எனும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவங்களை வழங்கிய நிலையில் பணிச்சுமையால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் முகேஷ் ஜாங்கிட்(வயது 45) என்பவர் தற்கொலை செய்துள்ளார். ஆல்வார் மாவட்டம் தர்ம்புரா கிராமத்தை சேர்ந்த இவர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்த நிலையில் அவர் கடந்த 16ம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் எழுதிய கடிதத்தில் எஸ்ஐஆர் பணி தொடர்பாக சூப்பர்வைசர் தந்த அழுத்தத்தால் இரவு, பகல் என முழுநேரம் பணியாற்றி வந்தேன். மனஅழுத்தத்தால் தற்கொலை செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் அங்கன்வாடி பணியாளரான பழங்குடியினத்தை சேர்ந்த சாந்தி முனி எக்கா என்வர் தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛SIR பணி தொடங்கியது முதல் அது 28 பேரின் உயிரை பறித்துள்ளது. பணி சுமை, மனஅழுத்தத்தால் அவர்கள் தங்களின் உயிரை மாய்த்துள்ளனர்'' என குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார். அதில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணியில் இருக்கும் பிரச்சனைகளை களைய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications