‘பாரத் ஜோடோ யாத்ரா’ வெற்றியா? தோல்வியா? வென்ற தொகுதிகள் எத்தனை? #Fulldata
சென்னை: ராகுல் காந்தி தேர்தலுக்கு முன்பு தனது பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கினார். இந்த யாத்திரை பயணம் செய்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது? கிடைத்த தொகுதிகள் எத்தனை?
ராகுல் காந்தியின் உழைப்பால் காங்கிரஸ் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது ஒரு சுயேச்சை உறுப்பினர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ஆக, காங் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வெற்றிக்குப் பின்னால், ராகுல் காந்தியின் கடினமான உழைப்பு கலந்திருக்கிறது. இவர் தனது 'பாரத் ஜோடோ’ முதல் யாத்திரையைக் கடந்த செப்டம்பர் 2022 முதல் ஜனவரி 2023 வரை நடத்தினார்.
அதற்கான பிள்ளையார் சுழியைக் கன்னியாகுமரியில் போட்டார். அங்கு தொடங்கி இவரது பயணம் காஷ்மீரில் முடிவடைந்தது. இந்தப் பாதைகளின் வழியே அவர் மொத்தம் 71 மக்களவைத் தொகுதிகளைக் கால்நடையாகக் கடந்து சென்றார்.
அடுத்து இரண்டாவது 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா’வை அவர் ஜனவரி 14, 2024 அன்று மணிப்பூரில் உள்ள தௌபால் மாவட்டத்தில் தொடங்கினார். அந்தப் பயணம் மார்ச் 16, 2024 அன்று மும்பையில் நிறைவடைந்தது.
இதன் மூலம் 100 மக்களவைத் தொகுதிகளையும் 337 சட்டமன்றத் தொகுதிகளையும் கடந்த அவர், மொத்தமாக 110 மாவட்டங்களை உள்ளடக்கி நடந்தார். இந்தப் பேரணி மூலம் 6,713 கி.மீட்டரை அவர் கடந்தார்.
'பாரத் ஜோடோ’ யாத்திரை பயணத்திற்குள் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 20 தொகுதிகளுக்கு மேல் இடம்பெற்றது.
இந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தப் பயணத்தில் மூலம் மக்கள் ராகுலை ஆரத்தழுவி வரவேற்றனர்.
ஆகவே இந்த இருகட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முட்டுக்கட்டை எதுவும் ஏற்படாமல் முடிவுக்கு வந்தது. இணக்கமாக இருகட்சிகளும் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டன.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி ஆக்ராவில் நடந்த உத்தரப்பிரதேச யாத்திரையின் போது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் ராகுல் காந்தியுடன் இணைந்து பயணித்தார்.
தமிழ்நாடு
தமிழகத்தில் 'பாரத் ஜோடோ’ யாத்திரை நடத்தப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றைக் காங்கிரஸ் வென்றுள்ளது. மற்றொரு தொகுதியை அதன் கூட்டணிக் கட்சியான திமுக கைப்பற்றியுள்ளது. ஆனால், இந்தியா கூட்டணி மொத்தம் 39 இடங்களையும் கைப்பற்றியது.
கேரளா
மெகா பேரணியில் பயணம் செய்த 11 தொகுதிகளில் 7 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக இந்த மாநிலத்தில் காங்கிரஸ் 14 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை செய்துள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானாவில் கடந்த 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திரப் பிரதேசம்
முதல் 'பாரத் ஜோடோ யாத்திரை’ நடைபெற்ற ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் இரண்டு இடங்களில் போட்டியிட்டது. ஆனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் காங். கட்சி வெற்றி பெறவில்லை.
கர்நாடகா
முதல் 'பாரத் ஜோடோ' பேரணி கர்நாடகாவைக் கவர் செய்திருந்தார் ராகுல். இதனால் இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் 9 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதில் பேரணி நடைபெற்ற 7 தொகுதிகள் அடங்கும். எதிரணியான பாஜக 17 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜனதா தளம் 2 தொகுதிகளைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா
இந்த மாநிலத்தில் உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி தேசிய அளவில் 'இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் ராகுல் பேரணி நடத்திய இடங்களில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் வென்றுள்ளது.
குஜராத்
குஜராத்தில் ஐந்து தொகுதிகளில் ராகுல் பயணம் செய்திருந்திருந்தார். இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனது முதல் கணக்கை இம்மாநிலத்தில் மீண்டும் திறந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள்
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரில் ஜனவரி 14 அன்று தொடங்கியது. அதற்கு முன்பாக அங்கே பெரும் கலவரங்கள் நடந்தன. அதையொட்டி ராகுல் அம்மாநிலத்திற்குக் காலடி எடுத்து வைத்தார்.
ஆகவே, பலரது கவனம் ராகுல் மீது விழுந்தது. அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து வழியாக மொத்தம் 11 நாடாளுமன்றத் தொகுதிகளைப் பேரணி கடந்து சென்றது. இதன்மூலம் காங்கிரஸ் ஆறு இடங்களில் வெற்றி பெற்றது.
பீகார்
பீகார் வழியாகச் சென்ற ராகுல் காந்தியின் 2வது யாத்திரை இந்த மாநிலத்தில் மொத்தம் ஏழு தொகுதிகளை கவர் செய்தது. அதில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆக, களம் கண்ட அனைத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதற்கிடையில், எதிர் கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி
முதல் காங்கிரஸ் பேரணியின் போது இடம்பெற்ற டெல்லியிலும் காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. பேரணி கடந்து சென்ற ஐந்து இடங்களில் இரண்டில் பெரிய பழைய கட்சி போட்டியிட்டது, மீதமுள்ள மூன்றில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. ஆனால், ஐந்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.
ஹரியானா
அதன் பேரணி நடந்த ஐந்து இடங்களில் ஒன்றைக் காங்கிரஸ் வென்றது, மீதமுள்ள இடங்களை பாஜக கைப்பற்றியது.
ஜம்மு காஷ்மீர்
இம்மாநிலத்தில் தான் ராகுலின் முதல் பேரணியின் நிறைவடைந்தது. காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீரில் நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இதன் கூட்டணிக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி இரண்டு இடங்களில் வென்றுள்ளது. மீதமுள்ள 2 இடங்களை இந்தியா கூட்டணி இழந்துள்ளது.
மத்தியப் பிரதேசம்
பாஜக அனைத்து இடங்களையும் வென்றுள்ளதால். இந்த மாநிலத்தில் ஒரு இடத்திலும்கூட காங். வெற்றிபெற முடியவில்லை. ராகுல் யாத்திரையால் இங்கே ஒரு பலனும் கிடைக்கவில்லை.
பஞ்சாப்
'பாரத் ஜோடோ’ யாத்திரை நடந்த பகுதிகளில் 6 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியது. மொத்தமாக 7 தொகுதிகளில் காங் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான்
இம்மாநிலத்தில் ஏழு தொகுதிகளை உள்ளடக்கி கவர் செய்திருந்தது ராகுலின் மெகா பேரணி. இதனால் இக்கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது.
மேற்கு வங்காளம்
'பாரத் ஜோடோ நியாய’ யாத்திரை மேற்கு வங்கத்தில் பெரிய அளவில் பலன் தரவில்லை. காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
ஜார்கண்ட்
பாரத் ஜோடோ பேரணி புகுந்து புகுந்து சென்ற ஏழு தொகுதிகளில் நான்கு இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அதில் 2 இடத்தை மட்டுமே இக்கட்சியால் வெல்ல முடிந்தது.
சத்தீஸ்கர்
ராகுல் யாத்திரை நடைபெற்ற நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications