வாய்விட்டு கேட்ட வைகோ.. அமைதி காத்த "மேலிடம்".. கடைசியில் எல்லாம் "இவ்வளவுதானா".. வெளியான லிஸ்ட்
வைகோவின் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
சென்னை: திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அந்த வகையில், மதிமுகவின் லிஸ்ட்டும் வெளியாகி உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக, திமுக மேலிடத்திடம் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் இறங்கியபோதே, பல்வேறு அதிருப்திகள் அப்போது ஏற்பட்டன.
எதுவானாலும் மாவட்ட செயலாளர்களிடம் பேசி கொள்ளுமாறு மேலிடம் கை காட்டிவிடமும், அதன்படியே, பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

மதிமுக
குறிப்பாக, மதிமுகவிற்கு தமிழகம் முழுக்க அனைத்து மாவட்ட அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் தோல்வியை சந்தித்தன.. சென்னை திருவள்ளூர் மாவட்டம் சார்பில் திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மதிமுகவினருக்கு 5 வார்டு எண்ணிக்கையில் குறைவாகவே ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்த சம்பவமும் நிகழ்ந்தது.

நாகர்கோவில்
அதேபோல, மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாகர்கோவில், தூத்துக்குடி, ஓசூர் உள்பட 5 மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது.. அதுபோலவே, மதிமுகவும், செல்வாக்காக உள்ள சிவகாசி மேயர் பதவியை கேட்டு திமுக தலைமையை அணுகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தேர்தலில் திமுக கூட்டணியே 90 சதவீதம் இடங்களை கைப்பற்றிய நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

கூட்டணி
அந்த வகையில் மதிமுகவுக்கு ஒரு மாநகராட்சி துணை மேயர், ஒரு நகராட்சித் தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 3 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் கூட்டணியில் இடம்பெற்ற விசிகவைவிட மதிமுகவுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் முழுமையான விவரத்தை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி துணை மேயர்
1. ஆவடி - திருவள்ளூர் மாவட்டம்
நகராட்சி தலைவர்
1.மாங்காடு - காஞ்சிபுரம் மாவட்டம்
நகராட்சி துணைத் தலைவர்
1.பரமக்குடி - ராமநாதபுரம் மாவட்டம்
2.கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்
3.குளித்தலை -கரூர் மாவட்டம்
பேரூராட்சித் தலைவர்
1.திருவேங்கடம் - தென்காசி மாவட்டம்
2.ஆடுதுறை - தஞ்சாவூர் மாவட்டம்
3.சென்னசமுத்திரம் - ஈரோடு மாவட்டம்

பேரூராட்சி துணைத் தலைவர்
1.பாளையம் - திண்டுக்கல் மாவட்டம்
2.ஆவல்பூந்துறை - ஈரோடு மாவட்டம்
3.அரச்சலூர் - ஈரோடு மாவட்டம்

மேயர் பதவி
அதன்படி மதிமுகவுக்கு ஆவடி துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது... மேயர் பதவி வரை கேட்டுப்பார்த்தும் கிடைக்கத நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவியை மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சிக்கு ஆறுதலை தந்துள்ளது.. அதேபோல, மாங்காடு நகராட்சி தலைவர் பதவியும், 3 நகராட்சி துணைத் தலைவர் பதவிகளும் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விசிக
திருவேங்கடம், ஆடுதுறை, சென்னசமுத்திரம் உள்ளிட்ட பேரூராட்சித் தலைவர் பதவிகளும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது... பாளையம், அவல்பூந்துறை, அரச்சலூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.. எப்படி பார்த்தாலும், விசிக பெற்ற இடங்களைவிட ஓரளவு குறைந்த பதவிகளே மதிமுகவுக்கு கிடைத்துள்ளது கவனிக்கத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications