ஒன்றா? இரண்டா?.. படத்தில் எத்தனை "மாடுகள்" இருக்கின்றன? 5 செகண்டில் கண்டுபிடிச்சா கில்லி தான்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை மாடுகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு 5 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் இந்த படத்தில் எத்தனை மாடுகள் உள்ளன என்று சரியாக சொல்லிவிட்டால் நீங்க ஜீனியஸ் தான். என்ன சவாலுக்கு ரெடியா?..
மூளையை கசக்கி பிழிய செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. தினம் தினம் புதிது புதிதாக இணையத்தில் பரவி வரும் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள், பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் இந்த இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடித்து தங்கள் திறனை சோதித்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும். ஒருமுறை பார்க்கும் போதே விடையை கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால், தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அதனை அனுப்பி வைத்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கிறார்கள்.
அப்படித்தான் இன்று ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் குழப்பம் அடைய செய்துள்ளது. இந்த படத்தில் என்ன சவால் என்றால், பனிப்பாறைகள் போல இருக்கும் ஆப்டிகல் படத்தில் மாடுகளின் உருவம் தெரிகிறது. உண்மையில் பனிப்பாறைகள் இருக்கிறதா அல்லது மாடுகள் அப்படி தெரிகிறதா என்று குழப்பமடைய செய்யும் வகையில் இருக்கிறது.
ஆனால் நன்கு உற்று பார்த்தால் மாடுகள் அங்கு இருப்பது நன்றாக தெரியும். ஆனால் கேள்வி அதுவல்ல.. படத்தில் மொத்தம் எத்தனை மாடுகள் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதே சவால் ஆகும். ஒன்றிரண்டு மாடுகள் இருப்பது மேலோட்டமாக பார்க்கும் போது நம் கண்களுக்கு தெரியும். ஆனால் படத்தில் மேலும் சில மாடுகள் உள்ளன. 5 செகண்டில் எத்தனை மாடுகள் என்று சரியாக சொன்னால் நீங்க ஜீனியஸ் தான்..
என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. 5. ஒகே டைம் ஓவர். படத்தில் எத்தனை மாடுகள் என்று சரியாக சொன்னர்வர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க ஜீனியஸ் தான். ஆனால் இங்கு சரியான விடை எது என்று தெரியாமல் தினறுபவர்கள் மீண்டும் ஒருமுறை பாருங்கள். விடையை கண்டுபிடித்துவிடலாம்.

3 மாடுகள், 4 மாடுகள், 6 மாடுகள் இருக்கிறது என்று சொன்னால் தவறு. பனிப்பாறை போல் லேசாக தெரிவதால் நம் கண்களை குழப்பமடைய செய்யும். எனினும் நன்கு உற்று பார்த்தால் விடையை கண்டுபிடித்துவிடலாம். அப்படியும் முடியவில்லை என்று சொல்கிறீர்களா? நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். படத்தில் மொத்தம் 5 மாடுகள் இருகின்றன. இதுவே சரியான விடை ஆகும். இங்கே விடை காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications