"14 நாள் லீவு".. இந்த மாதம் வங்கிக்கு போறீங்களா? தமிழகத்தில் எந்தெந்த தினங்களில் விடுமுறை தெரியுமா?
சென்னை: செப்டம்பர் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தம் 30 நாட்கள் உள்ள நிலையில் 14 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினம் என்பது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் நிலையில் தமிழகத்தில் இயங்கும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் லீவு பொருந்தும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாம் அனைவரும் தற்போது வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகிறோம். வங்கி கணக்கில் சேமித்த பணத்தை தற்போது யுபிஐ, நெட் பேங்கிங் மூலம் பணப்பரிமாற்றம் செய்கிறோம். அதேபோல் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை வங்கி கணக்கிற்கு செலுத்துவது மற்றும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வருகிறோம்.

இதனால் முன்பு போல் நாம் அனைவரும் வங்கிகளுக்கு அடிக்கடி செல்வது இல்லை. இருப்பினும் கூட சில சந்தர்ப்பங்களில் நம்மில் பலரும் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது யுபிஐ, நெட் பேங்கிங், ஏடிஎம் மூலம் பெற முடியாத வங்கி சேவைகளை பெற நாம் கட்டாயம் வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டியிருக்கும்.
அந்த வகையில் இன்று பிறந்த செப்டம்பர் மாதத்தில் பலரும் வங்கிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கலாம். அப்படி வங்கிகளுக்கு செல்ல வேண்டி இருப்பவர்கள் முக்கிய விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது செப்டம்பர் மாதத்தில் மட்டும் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினம், தேசிய விடுமுறை நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களை சேர்த்து மொத்தம் 14 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 1 (ஞாயிற்றுக்கிழமை), செப்டம்பர் 7 ( விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 8 - (ஞாயிறு), செப்டம்பர் 13 ( ராமதேவ் ஜெயந்தி / தேஜா தசமி), செப்டம்பர் 14 - (2வது சனிக்கிழமை / ஓணம்), செப்டம்பர் 15 -(ஞாயிறு / திருவோணம் )செப்டம்பர் 16 (ஈத் இ மிலாத்), செப்டம்பர் 17 (இந்திர ஜாத்ரா), செப்டம்பர் 18 (ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி), செப்டம்பர் 21 (ஸ்ரீ நாராயண குரு சமாதி), செப்டம்பர் 22 (ஞாயிற்றுகிழமை), செப்டம்பர் 23 (ஹீரோஸ் மார்த்டோம் டே), செபம்பர் 28 (4வது சனிக்கிழமை), செப்டம்பர் 29 (ஞாயிறு) என மொத்தம் 14 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நாம் முக்கிய விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது நம் நாட்டை பொறுத்தவரை வங்கி விடுமுறை தினம் என்பது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. இதற்கு அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் தான் காரணம். உதாரணத்துக்கு ஓணம் பண்டிகை கேரளாவில் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் தமிழகத்தில் அப்படியில்லை. இதனால் அன்றைய தினம் கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். மாறாக தமிழகத்தில் வங்கிகள் செயல்படும்.
இப்படி ஒவ்வொரு பண்டிகைகளிலும் குறிப்பிட்ட நாட்கள் சில மாநிலங்களில் இயங்கும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படும். மாறாக அதேநாளில் பிற மாநிலங்களில் இயங்கும் வங்கிகள் என்பது செயல்படும். அந்த வகையில் தமிழகத்தை எடுத்து கொண்டால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வருகிறது. இதில் 5 நாட்கள் ஞாயிற்றுக்கிழமையாகும்.
மீதமுள்ள 4 நாட்கள் என்னவென்றால் செப்டம்பர் 7 ம் தேதி (விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 14 (2வது சனிக்கிழமை), செப்டம்பர் 16 (ஈத் இ மிலாத்), செப்டம்பர் 28 (மாதத்தின் 4வது சனிக்கிழமை) உள்ளிட்ட தினங்களாகும். இதனால் தமிழகத்தில் வங்கிகளுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டு இருந்தால் மேற்கூறிய இந்த 9 நாட்களை கவனத்தில் கொண்டு தங்களின் பிளானை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications