ரயில்களில் எவ்வளவு கிலோ எடை வரை லக்கேஜ்களை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்லலாம்.. விதிகள் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது எத்தனை கிலோ வரை எடை கொண்ட லக்கேஜ்களை இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி உண்டு என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ள விதிதான் என்றாலும், பயணிகள் பலருக்கும் தெரியவில்லை என்பதால் ரயில்வே மீண்டும் ஒருமுறை இந்த விதிகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்கை கொண்டதாக ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொலை தூரம் பயணம் என்றால் பயணிகள் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா? என்றே பார்ப்பார்கள். டாய்லட் வசதி, சொகுசு மற்றும் பாதுகாப்பான பயணம் ஆகியவற்றால் ரயில் பயணமே பயணிகளின் முதல் சாய்சாக இருக்கும்.

how-many-kg-of-luggage-can-be-carried-on-trains-without-charge-these-are-the-rules

ரயில்வேயின் விதிகள்

இதனால், ரயில்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும். நாடு முழுவதும் தினமும் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான ரயில்கள் மூலம் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை ஆயிரக்கணக்கான ரயில்வே நிலையங்களும் நாடு முழுக்க உள்ளன.

ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வேயில் எவ்வளவு லக்கேஜ்களை கட்டணம் இன்றி எடுத்து செல்லலாம் என்ற விதியை பற்றி தெரிவது இல்லை. இந்த நிலையில்தான் தற்போது ரயில்களில் லக்கேஜ் விதிகளை பற்றி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

ஏசி பெட்டியில் எத்தனை கிலோவுக்கு அனுமதி

how-many-kg-of-luggage-can-be-carried-on-trains-without-charge-these-are-the-rules

* முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் 70 கிலோ வரையிலான லக்கேஜ்களை தங்களுடன் எடுத்து செல்லலாம். இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் தேவையில்லை.
* ஏசி இரண்டு அடுக்கு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் என்றால் 50 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்து செல்லலாம்.

* ஏசி 3 tier எனப்படும் மூன்றடுக்கு, மற்றும் சாதாரண ஸ்லீப்பர் பெட்டியில் செல்லும் பயணிகள் 40 கிலோ வரை கட்டணம் இன்றி எடுத்து செல்லலாம்.
* செக்கண்ட் சிட்டிங் எனப்படும் இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி என்றால் பயணிகள் 35 கிலோ வரை உடைமைகளை எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அபராதம் எவ்வளவு

* அனுமதிக்கப்பட்ட இந்த எடையை விட லக்கேஜ்களின் எடை அதிகமாக இருந்தால் நீங்கள் 1.5 மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
* இந்த விதிமுறைகள் பயணிகள் அதிகப்படியான எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்து செல்வதை தவிர்க்கும் வகையிலும் பிற பயணிகளுக்கு சிரமம் ஏற்படாததை உறுதி செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

* ரயில்வேயை பொறுத்தவரை பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் நிலையத்திலேயே பயணிகள் கட்டணம் செலுத்தி ஓய்வு எடுக்க வசதி முக்கியமான ரயில் நிலையங்களில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
* அதேபோல ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக 60 ரயில் நிலையங்களுக்குள் கன்பார்ம் டிக்கெட் இல்லாதவர்கள் ரயில் வரும் வரையில் செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்

* பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அதி நவீன சொகுசு வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்க்ளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

* இந்த வந்தே பாரத் ரயிலில், முழுவதும் ஏசி வசதி, தானியங்கி கதவுகள், பயோ டாய்லட், சுழலும் இருக்கைகள், விசாலமான ஜன்னல் கண்ணாடிகள் என பல வசதிகள் உள்ளன. தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலும் இயக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+