படத்தில் எத்தனை குருவிகள் உள்ளன? சரியாக சொன்னால் நீங்க ஜீனியஸ் தான்.. 5 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது.. படத்தில் எத்தனை குருவிகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 5 செகண்டில் நீங்கள் கண்டுபிடித்தால் அதிபுத்திசாலி தான். உங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த படத்தில் எத்தனை குருவிகள் உள்ளன என்று கண்டுபிடிக்க முடிகின்றதா என்று பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஓளியியல் மாயை படங்கள் ஒரு படத்தை நாம் எப்படி பார்க்கிறோம்?, அந்த கோணத்தில் புரிந்து கொள்கிறோம் என்பதை கணிக்க கூடியதாக உள்ளது. ஒருவரின் புத்தி கூர்மை, சிந்தனை ஆற்றல் ஆகியவற்றைக் கூட இத்தகைய இல்யூஷன் படங்களை வைத்து யூகித்துவிட முடியும் என சில ஆய்வுகளும் சொல்கின்றன.

how-many-sparrows-are-there-in-the-optical-illusion-picture-if-you-find-it-in-5-seconds-you-are-gen

ஆப்டிகல் இல்யூஷன் படம்

இதுபோன்ற இல்யூஷன் படங்களை போல புதிர் படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. நெட்டிசன்கள் இந்த படத்தை பகிர்ந்து விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். குறிபிட்ட நேரத்திற்குள் நம்மால் விடையை கண்டுபிடிக்க முடிகிறதா? என ஒரு ஜாலியான டெஸ்ட் வைத்துக்கொள்வதால் நெட்டிசன்களுக்கு பயனுள்ள பொழுதுபோக்காக இந்த இல்யூஷன் படங்கள் அமைந்துள்ளன.

இங்கே நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் கொஞ்சம் சவால் மிக்கது. படத்தை நன்றாக உற்று பாருங்கள். ஒரு சிறிய மரக்கிளையில் கம்பளி பூச்சி செல்வது போன்ற காட்சி உள்ளது. பார்ப்பதற்கு அப்படியே தத்ரூபமாக இயற்கை காட்சிகளை கண்முன்னே கொண்டு நிறுத்துவது போல அமைந்து இருக்கும் படத்தை கொஞ்சம் ஆழமாக பார்த்தால் அந்த படம் வேறு விதமாக தெரியும்.

எத்தனை குருவிகள் உள்ளன?

படத்தை உற்று பார்த்துவிட்டு அப்படியெல்லாம் ஒன்னும் தெரியவில்லை என நினைக்கிறீர்களா.. நன்றாக பாருங்கள் கம்பளி பூச்சின் மேல் பகுதியில் வரிசையாக குருவியின் அலகுகள் போல தெரிகிறதா... இப்போது படத்தை பாருங்கள்.. அங்கு இருப்பது கம்பளி பூச்சியே இல்லை. அனைத்துமே குருவிகள்தான். மரக்கிளையில் குருவிகள் வரிசையாக அமர்ந்து இருப்பதுதான் பார்ப்பதற்கு அப்படியே கம்பளிப்பூச்சி போல தெரிகிறது.

இனிதான் விஷயமே இருக்கிறது. இந்தக் கிளையில் மொத்தம் எத்தனை குருவிகள் அமர்ந்து இருக்கின்றன என்பதே உங்களுக்கான டாஸ்க்... என்ன சவாலுக்கு ரெடியா? அதுவும் வெறும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1, 2, 3, 4, 5. ஓக்கே டைம் ஓவர்.. நேரம் முடிந்துவிட்டது பலரும் சரியான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.

அதிபுத்திசாலியாக நீங்க?

குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. ஆனால் 7 குருவிகள் இருக்கின்றன.. 8 குருவிகள் இருக்கின்றன.. 10 குருவிகள் இருக்கின்றன என்று சொன்னால் விடை தவறு ஆகும். மீண்டும் ஒருமுறை படத்தை பார்த்து எத்தனை குருவிகள் உள்ளன என்று கண்டுபிடியுங்கள்.

இப்போது பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.. படத்திற்கான விடை 9. மொத்தம் 9 குருவிகள் அதில் உள்ளன. விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அதிபுத்திசாலிகள்தான்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+