ஆதார் கார்டில் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை எத்தனை முறை அப்டேட் செய்யலாம்
சென்னை: ஆதார் கார்டில் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை எத்தனை முறை அப்டேட் செய்யலாம் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம். அதேபோல ஆதாரில் செய்யப்படும் அப்டேட்களுக்கு என்ன மாதிரியான ஆவணங்கள் தேவைப்படும் என்பது குறித்த விவரங்களை இங்கே விவரமாக பார்க்கலாம்.
ஆதார் கார்டு என்பது தற்போது தவிர்க்க முடியாத ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் பெற முடியும் என்ற நிலை உள்ளது. மத்திய மாநில அரசுகளில் நலத்திட்டங்களை பெறுவதற்கும் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றிற்கும் தற்போது ஆதார் எண்ணே பிரதான அடையாள ஆவணமாக கேட்கப்படுகிறது.

ஆதார் கார்டு திருத்தங்கள்
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு கூட ஆதார் அடையாள அட்டை அவசியம் கேட்கப்படுகிறது. இதனால், ஆதார் கார்டுகளில் பெயர், பிறப்பு தேதி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை துல்லியமாக வைத்து இருப்பது அவசியம். ஒருவேளை இதில் தவறு இருந்தால் கூட ஆதார் அப்டேட் மையங்களில் சென்று மாற்றிக்கொள்ள முடியும்.
எனினும், இந்த அப்டேட்களை வரம்பு இன்றி செய்யலாமா? அல்லது சில குறிப்பிட்ட முறைதான் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்து ஆதார் விதிகள் என்ன சொல்கின்றன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பெயர் மாற்றம்
* ஆதார் ஆவணங்களில் பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை வரம்பு இன்றி மாற்ற முடியாது. அதாவது, பெயர் மாற்றம் இருமுறை செய்யலாம்.
* திருமணத்திற்கு பிறகு தங்கள் துணைப்பெயரை மாற்ற விரும்பும் பெண்களுக்கு இது பெரும் வசதியாக உள்ளது.
* பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே செய்ய முடியும். பிறந்த தேதியில் ஏதாவது ஒரு தவறு இருந்தால் ஒருமுறை மட்டும் உரிய ஆவணங்களை சமர்பித்து செய்து கொள்ளலாம்.
* முகவரி மாற்றம் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். புதிய ஊர்களுக்கு குடிபெயர்ந்தால் மாற்றும் வகையில் வரம்பற்ற முறையில் மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* ஆதார் மையம் அல்லது ஆன்லைனில் உரிய ஆவணங்களை காட்டி மாற்றிக்கொள்ளலாம். வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு, கேஸ் பில், எல்க்ட்ரிசிட்டி பில், வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை சமர்பித்து மாற்ற முடியும்.
மொபைல் எண்:
* பாலினத்தை ஒரே ஒருமுறை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். ஒருவேளை ஆதார் கார்டு பெறும் போது தவறுதலாக அப்டேட் செய்யப்பட்டால் அதை திருத்த ஒரு வாய்ப்பாக இது வழங்கப்படுகிறது. எனவே ஆதார் கார்டு பெறும் போதே பாலினம் சரியாக குறிப்பிட்டு உள்ளதா என்பதை ஒருமுறைக்குக் இருமுறை செக் செய்துகொள்ள வேண்டும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணை எத்தனை முறை வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ள முடியும். ஓடிபி உள்ளீடு செய்து மாற்றிக்கொள்ளலாம். ஆதார் அப்டேட் மையம் அல்லது தபால் அலுவலகங்களுக்க்கு சென்று இதை மாற்றிக்கொள்ள முடியும்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் கார்டில் எந்த ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் உரிய ஆவணங்கள் தேவைப்படும். வெரிபிகேஷனுக்கு அசல் சான்றிதழ் தேவைப்படும். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் மாற்றங்கள் செய்யலாம். ஆதார் கார்டுகள் மிக மிக முக்கியமான ஆவணம் என்பதால் இதில் அப்டேட் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications