தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை!
சென்னை: "கட்சித் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது; அதில் தனிநபர் விருப்பங்களுக்கு இடமில்லை" - இந்த ஒற்றை வரியை மீண்டும் ஒருமுறை தாம்பரம் தொகுதி வழியே நிரூபித்துக் காட்டியிருக்கிறது அறிவாலயம்.
தாம்பரம் என்றாலே அரசியல் வட்டாரத்தில் எப்போதும் ஒரு 'ஹைப்' உண்டு. ஏனென்றால் இது சென்னையின் நுழைவு வாயில் போன்றது.. தனி மாநகராட்சி வேறு.. சட்டசபை தேர்தலில் இந்த முறை திமுக வேட்பாளராக தாம்பரத்தில் டாக்டர் கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டபோது, அது பலருக்கும் வியப்பாகத்தான் இருந்தது. காரணம், தற்போதைய எம்.எல்.ஏ எஸ்.ஆர். ராஜாவுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் அசைக்க முடியாத செல்வாக்கு.

எதிர்ப்பும்... எகிறிய எமோஷன்களும்!
கிருத்திகா தேவியின் பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம், எஸ்.ஆர். ராஜாவின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர். எஸ்.ஆர் ராஜா சிட்டிங் எம்எல்ஏ வலுவான தலைவர்.. கிருத்திகாவும் பாரம்பரிய திமுக குடும்பம், தாம்பரத்தில் மக்கள் இடையே நல்ல பிரபலம். இப்படி இருக்க எஸ். ஆர் ராஜ ஆதரவாளர்களிடம்.. "எங்கள் அண்ணனுக்கு சீட் இல்லையா?" என்ற முழக்கங்கள் எதிரொலித்தன. ஆவேசம் தாங்காத தொண்டர்கள் நேராகச் சென்றது டி.ஆர். பாலுவின் இல்லத்திற்கு.
அங்கே சூழல் மிக நெருக்கடியாக இருந்தது. ஆனால், பல உட்கட்சி மோதல்களை கண்ட டி.ஆர். பாலு, வந்திருந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். ஆவேசமாக வந்தவர்களை அமர வைத்து, இன்முகத்துடன் பேசி, தலைமையின் முடிவில் உள்ள நியாயங்களையும், கட்சியின் எதிர்காலத் திட்டங்களையும் பக்குவமாக எடுத்துரைத்தார். ஒரு பெரும் பதற்றத்தை தனது அனுபவத்தால் மிக எளிதாகக் கையாண்டார் பாலு.
ஸ்டாலின் 'டச்'... மாறிய கிளைமேக்ஸ்!
இந்தச் சிக்கலை முதல்வர் ஸ்டாலின் எப்படிக் கையாளப் போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஏனென்றால் அறிவாலயத்தில் வாசலிலேயே ஸ்டாலின் வரும் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கேதான் ஸ்டாலினின் 'முதிர்ச்சியான அரசியல்' வெளிப்பட்டது. எஸ்.ஆர். ராஜாவின் விசுவாசத்தையும் உழைப்பையும் நன்கு அறிந்த ஸ்டாலின், அவரிடம் நேரடியாகப் பேசி, "கட்சிக்கு இப்போது உங்கள் போன்ற சீனியர்களின் வழிகாட்டல் அவசியம்" என்பதை கட்சியின் மற்ற தலைகள் வழியாக தெளிவுபடுத்தினார்.
விளைவு? நேற்று தாம்பரத்தில் பெரிய ட்விஸ்ட் நிகழ்ந்தது. வேட்பாளர் கிருத்திகா தேவி மனுத்தாக்கல் செய்யச் சென்றபோது, அவருக்கு அருகிலேயே நின்று ஆதரவை வழங்கினார் சிட்டிங் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா. "சீட் எனக்கு கிடைக்கவில்லை என்றாலும், திமுக வெற்றிதான் இலக்கு.. என அவர் காட்டிய அந்தப் பக்குவம், திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திமுக சமாதானம்
ஒருவழியாக உட்கட்சி கசப்பு முடிவிற்கு வந்துவிட்டது என்ற உற்சாகத்தில் உள்ளனர் நிர்வாகிகள். திமுக-வில் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தலைமையின் முடிவு என வந்துவிட்டால், சீனியர் முதல் ஜூனியர் வரை அனைவரும் ராணுவக் கட்டுக்கோப்புடன் இயங்குகிறார்கள். இதுதான் தேர்தல் நேரத்தில் அதிமுக, பாஜகவில் மிஸ்ஸிங்!
இதைத்தான் இன்று பாஜக, அதிமுக, மற்றும் புதிய வரவான தவெக ஆகிய முகாம்களில் காண முடியவில்லை. பாஜக-வில் உட்கட்சிப் பூசல்கள் பல நேரங்களில் தெருச்சண்டையாக மாறுகின்றன. அண்ணாமலைக்கு சீட் இல்லாதது கடும் மோதலாக உள்ளது. அதிமுக-வில் 'யார் பெரியவர்?' என்ற மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. எடப்பாடி மட்டும்தான் களத்தில் இருக்கிறார். விஜய்-யின் தவெக கட்சியிலோ, அடிமட்டத் தொண்டர்களுக்கும் தலைமைக்கும் இடையிலான உரையாடலே இன்னும் சீராகவில்லை. ஆனால், திமுக-வில் ஒரு சிறிய உரசல் ஏற்பட்டாலும், அதை உடனடியாக சரிசெய்யும் 'மெக்கானிசம்' மிக வலுவாக இருக்கிறது... அதைத்தான் தாம்பரம் நிரூபித்து உள்ளது!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications