ஃபாரீன் ரிடர்ன்.. வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கத்தை சுங்கக் கட்டணம் இன்றி எடுத்து வரலாம்?
சென்னை: வெளிநாடுகளில் பணி நிமித்தமாக தங்கிவிட்டு இந்தியா வருபவர்கள் சுங்கக்கட்டணம் இல்லாமல் எந்த அளவு தங்கம் கொண்டு வரலாம்? யார் யார் தங்கம் கொண்டு வரலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் எவ்வளவுதான் நகைக்கடைகள் இருந்தாலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் வீட்டுப் பெண்கள், இது துபாய் நகை, சவுதி நகை, மலேசியா நகை என்று சொல்வதை விரும்புவார்கள். என்ன காரணமோ தெரியவில்லை, வெளிநாட்டு நகை என்றால் அவர்களுக்கு அப்படி ஒரு பெருமை.

இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து பணிபுரிந்து சொந்த ஊருக்கு திரும்பும் என்.ஆர்.ஜக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருக்காக ஆசை ஆசையாக தங்கம் வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் ஒவ்வொரு நாடுகளை பொறுத்தும் தங்கம் விலை மாறுபடுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் கொண்டு சென்றால் அதற்கு சுங்கக் கட்டணத்தை இந்திய அரசு வசூலிக்கிறது.
ஆனால், இந்த சுங்கக்கட்டணத்தை கட்டாமல் தவிர்க்க பல்வேறு வடிவங்களில் தங்கத்தை மறைத்து விமானம், கப்பல் போக்குவரத்து மூலம் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இப்படி தினமும் பல கோடிக்கணக்கிலான தங்க நகைகள் கடத்தல் காரர்களிடம் இருந்து பிடிபடுகின்றன.
அதுமட்டுமின்றி யார் யார் எந்த அளவில், எந்த வடிவில் தங்கத்தை எடுத்து சென்றால் சுங்க கட்டணம் இல்லை என்ற விபரம் சாமானிய மக்களுக்கும் தெரியாமல் கூடுதல் நகையை கொண்டு சென்று விமான நிலையத்தில் அபராதத்தை கட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே இதற்கென இந்திய அரசு வகுத்துள்ள விதிகளை பார்ப்போம்.
சுங்கக்கட்டணம் இன்றி யார் எவ்வளவு தங்க நகையை கொண்டு செல்லலாம்?: இந்திய குடிமகனாக அவர் இருக்க வேண்டும். ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கி இருந்திருக்க வேண்டும். ஆண்கள் ரூ.50,000 என்ற மதிப்புக்கு மிகாமல் தங்க நகை கொண்டு வரலாம். பெண்கள் ரூ.1 லட்சம் என்ற மதிப்புக்கு மிகாமல் தங்க நகை எடுத்து வரலாம். நகையாக இருந்தால் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. தங்க கட்டிகள், தங்க காசுகளுக்கு சுங்கக் கட்டணம்.
இந்திய அரசு வகுத்துள்ள இந்த வரையறைகளை தாண்டி இருந்தால் சுங்கக்கட்டணம் கட்டாயம் வசூலிக்கப்படும். அதேபோல் மேற்கண்ட விதிகள் வெளிநாடுகளில் வாங்கிய நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் வாங்கி இருந்தால் சுங்கக்கட்டணம் கட்டத் தேவையில்லை. இந்த அளவு, வரையறை தாண்டி தங்கம் கொண்டு சென்றால் அது தொடர்பாக சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
அவர்களில் சொல்லாமல் மறைத்து கண்டுபிடிக்கப்பட்டால் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் அல்லது கைது செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த அளவை தாண்டி நகை வாங்கி செல்பவர்கள் ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியவர்களாக இருந்தால் சுங்கக் கட்டணத்தில் 13.75% தள்ளுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம்












Click it and Unblock the Notifications