வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? தங்கத்தை விற்க வருமான வரி செலுத்த வேண்டுமா? ரூல்ஸ் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதலீடாக எப்போதும் இருப்பது தங்கம் தான்.. ஆனால், ஒருவர் எத்தனை கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.. அதற்கு எதாவது வட்டி இருக்கிறதா.. விற்பனை செய்யும் போது என்ன வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து பலருக்கும் பலவித சந்தேகங்கள் இருக்கும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முதல் சேமிப்பாக இருப்பது தங்கம் தான். ஆபத்தான காலத்தில் தங்கத்தைப் போல எதுவும் உதவாது என்பதால் மக்கள் தங்கத்திலேயே முதலீடு செய்கிறார்கள்.

gold

அதேநேரம் நமது நாட்டில் தங்கம் வாங்கும் போதும் விற்பனை செய்யும் போதும் எதாவது வரி கட்ட வேண்டுமா.. ஒருவர் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் எனப் பலருக்கும் பல வித கேள்விகள் உள்ளன. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

தங்கம்: நமது நாட்டில் தங்கம் வாங்குதல், சேமிப்பு மற்றும் விற்பனைக்கு பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு விதித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாக நினைவில் கொள்ளுங்கள்.. அதாவது தங்க நகைகள் அல்லது ஆபரணங்களை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. அதேநேரம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகத் தங்கம் வைத்திருந்தால் அதை எங்கிருந்து வாங்கியுள்ளீர்கள் என்பதை விளக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக இருக்கும் தங்க நகைகளையும் குறிப்பிட வேண்டும்

எவ்வளவு வைத்திருக்கலாம்: அதன்படி பார்க்கும் போது தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ் நமது நாட்டில் திருமணமான பெண் வீட்டில் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். திருமணமாகாத ஒரு பெண் 250 கிராம் வரை வைத்திருக்கலாம். அதேநேரம் ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதாவது இந்தளவுக்குத் தங்கம் இருந்தால் அதை எப்படி வாங்கினார்கள்.. எங்கிருந்து பெறப்பட்டது என்பதை விளக்கத் தேவையில்லை. அதேநேரம் இந்த அளவுக்கு மேல் போனால் அதன் மூலத்தை விளக்கியாக வேண்டும்.

பலரது வீடுகளில் பரம்பரை பரம்பரையாகத் தங்கம் வைத்திருப்பார்கள். அதுபோல வைத்திருக்கும் தங்கத்திற்கு inheritance tax எனப்படும் பரம்பரை வரி இருக்குமா என்பதும் பலருக்கும் இருக்கும் கேள்வி.. ஆனால், இதற்கெல்லாம் வரி இல்லை. மேலும், மேலே கூறிய அளவுக்குள் இருந்தால் அதற்கான மூலத்தை விளக்கத் தேவையில்லை என்பதால் அதற்கும் வரி இல்லை.

வரி: தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.. அதேநேரம் தங்கத்தை விற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும். தங்கத்தை 3 வருடங்கள் வைத்திருந்த பிறகு விற்றால், கிடைக்கும் லாபத்திற்கு 20 சதவீதம் நீண்ட கால மூலதன ஆதாய (LTCG) வரி செலுத்த வேண்டும். அதேநேரம் 3 ஆண்டுகளுக்குள் விற்றால் நீங்கள் எந்த வருமான வரி பிரிவில் இருக்கிறீர்களோ.. அந்த வரியை செலுத்த வேண்டும்.

தங்க பத்திரங்கள்: பொதுமக்கள் சிலர் இப்போது தங்க நகைகளாக வாங்குவதற்குப் பதிலாகத் தங்கப் பத்திரங்களை வாங்குகிறார்கள். மத்திய அரசு வெளியிடும் இந்த தங்கப் பத்திரங்கள் 8 ஆண்டுகள் வரை இருக்கும். இந்த தங்கப் பத்திரங்களின் மதிப்பு தங்க விலையைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். இது தவிர இதற்கு ஆண்டுக்கு 2.5% வட்டியும் அளிக்கப்படும். இந்த தங்கப் பத்திரங்களை முதிர்வு காலம் 8 ஆண்டுகள் வரை வைத்திருந்தால் வரி இல்லை. அதேநேரம் முன்கூட்டியே விற்கப்பட்டால் இதற்கும் 20% வரி செலுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+