சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்.. கட்டணம் எவ்வளவு? எப்போது புறப்படும்? இதோ முழு லிஸ்ட்!
சென்னை: சென்னை எழும்பூர் டூ நாகர்கோவில், மதுரை - பெங்களூர் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கட்டணம் எவ்வளவு?, எந்தெந்த ஸ்டாப்களில் நின்று செல்லும்? எத்தனை மணிக்கு புறப்படும்? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலையும், மதுரை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயிலையும் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத் ரயில்: தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை - நெல்லை, பெங்களூர் - சென்னை, சென்னை - விஜயவாடா, கோவை - பெங்களூர், சென்னை - கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
கட்டணம் எவ்வளவு?: மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். தற்போது இந்த ரயிலில் பயணிக்க கட்டணம் எவ்வளவு என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, உணவுடன் சேர்த்து: -
* சென்னை எழும்பூர் - நாகர்கோவில் (சேர்கார் கட்டணம் - ரூ.1760), (எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ.3240)
* சென்னை எழும்பூர் - நெல்லை (சேர்கார் - ரூ.1665), (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.3055)
* எழும்பூர் - கோவில்பட்டி (சேர்கார் - ரூ.1350) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2620)
* எழும்பூர் - மதுரை (சேர்கார் - ரூ.1,200) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,295)
* எழும்பூர் - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.1105) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2110)
* எழும்பூர் - திருச்சி (சேர்கார் - ரூ.955) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1790)
* எழும்பூர் - விழுப்புரம் (சேர்கார் - ரூ.545) - (எக்சிகியூட்டிவ் சேர்கார். - ரூ.1,055)
* எழும்பூர் - தாம்பரம் (சேர்கார் - ரூ.380) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.705)
* நாகர்கோவில் - எழும்பூர் (சேர்கார் - ரூ.1735) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.3220)
* நாகர்கோவில் - தாம்பரம் (சேர்கார் - ரூ.1700) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.3175)
* நாகர்கோவில் - விழுப்புரம் (சேர்கார் - ரூ.1510) - (எக்சிகியூட்டிவ் சேர்கார்- ரூ.2775)
* நாகர்கோவில் - திருச்சி (சேர்கார் - ரூ.1000) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1945)
* நாகர்கோவில் - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.850) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1635)
* நாகர்கோவில் - மதுரை (சேர்கார் - ரூ.1735) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1405)
* நாகர்கோவில் - கோவில்பட்டி (சேர்கார் - ரூ.515) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.985)
* நாகர்கோவில் - நெல்லை (சேர்கார் - ரூ.440) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.830)
இந்த கட்டணமானது உணவுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு இல்லாமல் டிக்கெட் கட்டணமானது, சேர்கார் கட்டணத்திற்கு ரூ.310 குறையும். எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணத்தில் இருந்து ரூ.440 குறையும்.
புறப்படும் நேரம்: சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும். தாம்பரத்திற்கு 5.23 மணிக்கு வரும் இந்த ரயில் 2 நிமிடங்கள் நின்றுவிட்டு, 5.25 மணிக்கு அங்கிருந்து புறப்படும். விழுப்புரத்திற்கு 6.52க்கு வந்து சேரும். பின்னர் 6.55க்கு அங்கிருந்து புறப்படும். திருச்சி (வந்து செரும் நேரம் - 8.55 / புறப்படும் நேரம் - 9.00), திண்டுக்கல் (9.53 / 9.55), மதுரை (10.38 / 10.40), கோவில்பட்டி (11.35 / 11.37), நெல்லை (12.30 / 12.32) வழியாக நாகர்கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு செல்லும்.
நாகர்கோவிலில் எப்போது புறப்படும்?: இதேபோன்று மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு (3.18 / 3.20), கோவில்பட்டி (3.58 / 4.00), மதுரை (5.03 / 5.05), திண்டுக்கல் (5.48 / 5.50), திருச்சி (6.45 / 6.50), விழுப்புரம் (8.53 / 8.55), தாம்பரம் (10.28 / 10.30) வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்து சேரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications