சந்திரயான் - 3 வெற்றி! சாதிக்கப்போகும் ஆதித்யா எல்-1.. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் என்ன தெரியுமா?
சென்னை: நிலவின் தென்துருவ ஆய்வுக்கான சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில், சூரியனை ஆய்வு செய்யம் வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்பட அங்கு பணியாற்றும் விஞ்ஞானிகள் முதல் டிரைவர், சமையல்காரர்களுக்கான மாதசம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு காலத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் மட்டுமே விண்வெளி துறையில் சாதித்து கொண்டிருந்த நிலையில் தற்போது நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இந்த சாதனைகளுக்கு உதாரணம் ஏராளமாக உள்ளன. சமீபத்திய சாதனையை குறிப்பிட வேண்டும் என்றால் சந்திரயான் -3 திட்டத்தை சொல்லலாம். நிலவின் தென்துருவம் குறித்த ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டது தான் இந்த சந்திரயான் 3 திட்டம்.
அதன்படி சந்திரயான் -3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் கடந்த மாதம் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கிது. அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த ரோவர் நிலவில் கால்பதித்தது. பின்னர் விக்ரம் லேண்டர், ரோவர் உள்ளிட்டவை நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து அங்குள்ள வெப்பம், தனிமங்களை கண்டறிந்துள்ளது. சல்பர், ஆக்சிஜன், குரோமியம், டைட்டானியம் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது.
இதில் சாதனை என்னவென்றால் நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்வது மிகவும் சவாலான காரியமாகும். தென்துருவத்தில் தரையிறங்க முயன்ற ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்த நிலையில் அமெரிக்கா, சீனா தென்துருவத்தை கண்டுக்கொள்ளாமல் உள்ளன. இத்தகைய சூழலில் தான் கடந்த 2019 ல் சந்திரயான் -2 திட்டத்தில் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில்‛சாப்ட் லேண்டிங்' செய்ய முடியாமல் பின்னடைவை சந்தித்த இந்தியா மீண்டும் சந்திரயான் -3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளது. அதோடு நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்த முதல் நாடு என்ற பெயரையும் இந்தியா பெற்றுள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து தான் தற்போது நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சூரியன் குறித்த ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை நேற்று விண்ணில் செலுத்தி உள்ளனர். இந்த விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய உள்ளது. மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்னொரு மகத்தான சாதனை என்பது குறைந்த பட்ஜெட்டில் விண்வெளி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது தான்.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு ரூ.1000 கோடிக்கு அதிக பட்ஜெட்டில் விண்கலன்களை அனுப்பும் நிலையில் இந்தியாவின் சந்திரயான் -3 திட்டத்தின் மதிப்பு என்பது வெறும் ரூ.600 கோடி தான். அதோடு இதுவரை அந்த நாடுகள் கண்டுபிடிக்காத விஷயங்களை சந்திரயான் -3 கண்டறிந்து வியக்க வைத்துள்ளது. அதேபோல் சூரிய ஆய்வுக்கான இந்தியாவின் ஆதித்யா எல்-1 பட்ஜெட் என்பது ரூ.400 கோடிதான்.
இத்தகைய சிறப்புகளை கொண்ட இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் திறமையான விஞ்ஞானிகள் உள்ளனர். இவர்களால் தான் இந்தியா இன்று விண்வெளி துறையில் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. இத்தகயை சூழலில் தான் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் உள்பட டெக்னிஷியன்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போது இஸ்ரோ மையத்தின் தலைவராக கேரளாவை சேர்ந்த சோமநாத் உள்ளார். இவர் மாத சம்பளம்(அடிப்படை சம்பளம் மற்றும் பிற அலோவன்ஸ்) என்பது ரூ.2.25 லட்சம் முதல் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இஸ்ரோவில் முதன்மை விஞ்ஞானிகளாக இருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2 லட்சம் வரையும், மூத்த விஞ்ஞானிகளுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சமும் சம்பளம் வழங்கப்படும் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. பிற அலோவன்ஸ் என்பது வீட்டு வாடகை, பயண படி, டிஏ, மருத்துவ செலவு உள்பட மேலும் சில சலுகைகளை குறிக்கும்.
இதுதவிர டெக்சியன் - பி ஊழியர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையும், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சயின்டிபிக் அசிஸ்டென்ட், லைப்ரேரி அசிஸ்டென்ட் ஊழியர்களுக்கு ரூ.44,900-1,42,400 வரையும், ப்ரோகிராம் அசிஸஅடென்ட், சோசியல் ரிசர்ஜ் அசிஸ்டென்ட் ஊழியர்களுக்கு ரூ. 47,600-1,51,100 வரையும், மீடியா லைப்ரேரி அசிஸ்டென்ட், சயின்டிபிக் அசிஸ்டென்ட்க்க ரூ.44900-1,42,400 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மேலும் ஜூனியர் ப்ரோடியூசர், சோசியல் ரீசர்ஜ் ஆபிசர் - சி, சயின்டிஸ்ட்/என்ஜினீயர் எஸ்சி பிரிவில் பணியாற்றுவோருக்கு ரூ.56,100 - 1,77,500 வரையும், சயின்டிஸ்ட்/என்ஜினீயர் எஸ்டி ஊழியர்களுக்கு ரூ.67,700 முதல் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 7 வரையும், மெடிக்கல் ஆபிசருக்கு ரூ.67,000-2 லட்சம் வரையும், ரேடியோகிராமப் - ஏ ஊழியர்களுக்கு ரூ.25,500-81,100 வரையும், பார்மசிஸ்ட் ஏ பணியாளர்களுக்கு ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையும் மாதசம்பளமாக வழங்கப்படும்.
மேலும் லேப் டெக்னீசியன்களுக்கு ரூ.25,500 முதல் 81,100, நர்ஸ் பி-க்கு ரூ.44,900-1,42,400, சிஸ்டர் ஏ-க்கு ரூ.47,600 -1,51,100 வரையும், கேட்டரிங் அட்டென்ட் ஏ பணிக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையும், கேட்டரிங் சூப்பர்வைசர் பணிக்கு ரூ.35,400-1,12,400 வரையும், சமையல்காரருக்கு(Cook) பயர்மேன்-ஏ (Fireman-A)க்கு ரூ.19,900-63,200, டிரைவர் ஆபரேட்டர் ஏ பணியாளர்களுக்கு ரூ.21,700-69,100 வரையும், டிரைவர்களுக்கு ரூ.19,900-63,200 வரையும், அசிஸ்டென்ட், அப்பர் டிவிஷன் கிளர்க், ஜூனியர் பர்சனல் அசிஸ்டென்ட், ஸ்டென்னோகிராபர் பணியாளர்களுக்கு ரூ.25,500 -81,100 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
அதோடு அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர், அக்கவுன்ட்ஸ் ஆபிசர், பர்சேஸ் ஸ்டோர்ஸ் ஆபிசர்ஸ் உள்ளிட்டவர்களுக்கு ரூ.56,100 -1,77,500 வரையும், ஜூனிர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1 லட்சறத்து 12 ஆயிரத்து 400 வரையும் மாதசம்பளமாக வழங்கப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications