வீட்டில் அதிகபட்சம் எவ்வளவு பணம் ரொக்கமாக வைத்து இருக்கலாம் தெரியுமா? ரூல்ஸ் தெரியாம மாட்டிக்காதீங்க
சென்னை: ஒரு நபர் வீட்டில் அதிகபட்சம் எவ்வளவு பணம் வரை ரொக்கமாக வைத்து இருக்கலாம் என்ற கேள்வி எழலாம். திடீரென ஐடி அதிகாரிகள் வீட்டிற்கு வந்தால், வீட்டில் இருக்கும் சில லட்ச பணத்தையும் எடுத்து சென்றுவிடுவார்களோ? எனக் கூட சிலர் நினைக்கலாம். உண்மையில் ஐடி விதிகளின் படி இந்தியாவில் ஒருவர் வீட்டில் அதிகபட்சம் எவ்வளவு பணம் வரை வைத்து இருக்க முடியும்? ஐடி ரூல்ஸ் சொல்வது என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும், இதில் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாவதை நாம் அனைவருமே கவனித்து இருப்போம். சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவதும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்படும் சம்பவங்களும் நடைபெறும்.

இதுமாதிரியான விஷயங்களை கேள்வி படும் போது அனைவருடைய மனதிலும் ஒரு கேள்வி எழக்கூடும். ஒரு நபர் வீட்டில் அதிகபட்சம் எவ்வளவு பணம் ரொக்கமாக வைத்து இருக்கலாம் என்ற கேள்வி எழும். திடீரென ஐடி அதிகாரிகள் வீட்டிற்கு வந்தால், வீட்டில் இருக்கும் சில லட்ச பணத்தையும் எடுத்து சென்றுவிடுவார்களோ? எனக் கூட சிலர் நினைப்பார்கள்.. உண்மையில் ஐடி விதிகளின் படி இந்தியாவில் ஒருவர் வீட்டில் அதிகபட்சம் எவ்வளவு பணம் வரை வைத்து இருக்கலாம் என்றும் இது தொடர்பாக வருமான வரித்துறை விதிகள் சொல்வது என்ன? என்று இங்கே பார்க்கலாம்..
இது தொடர்பாக வருமான வரித்துறை சார்ந்த நிபுணர்கள் கூறும் போது, "ஒருநபர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எந்த வரைமுறையும் இல்லை என்கிறார்கள். அதாவது, வீட்டில் வைத்து இருக்கும் பணத்திற்கு முறையான வருமான ஆதாயம் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள், உரிய வரி செலுத்தியிருந்தால் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும் என்கிறார்கள்.
இது தொடர்பாக டேக்ஸ்மேன் நிறுவனத்தின் துணைத்தலைவர் நவீன் வத்வா கூறுகையில், "தனிநபர் ஒருவர் வீட்டில் வைத்திருக்க வேண்டிய அனுமதிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு என எதையும் வருமான வரித்துறை குறிப்பிடவில்லை. சட்டப்பூர்வ வருமான ஆதாயத்தில் பெற்ற பணம் எவ்வளவு வேண்டுமானாலும் உரிய வரியை செலுத்தி ஒருவர் வைத்துக்கொள்ளலாம். வருமான வரி சட்டம் பிரிவு 68 முதல் 69 பி வரையிலான பிரிவுகளின் படி, ஒருவரிடம் இருக்கும் பணத்திற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்யலாம்.
வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படும் வகையில் வருமான ஆதாயம் இல்லை என்றால் அது கணக்கில் காட்டாத பணமாக கருதப்பட்டு அதற்கு 78 சதவிகிதம் வரையிலும் வரியும் அபராதமும் விதிக்கப்படும்" என்றார். அதேபோல வரி மற்றும் முதலீட்டு துறையை சேர்ந்த நிபுணர்கள் கூறுகையில், "வருமான வரி சட்டமோ, ஆர்பிஐ விதிகளோ வீட்டில் அதிகபட்சமாக வைத்து இருக்க கூடிய ரொக்க பணம் என்பதற்கு இந்த வழிகாட்டுதல்களையும் விதிக்கவில்லை.
எனினும், சிலவற்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் ஒரு தொழிலை நடத்தினீர்கள் என்றால், நீங்கள் பராமரிக்கும் பதிவேட்டுடன் வைத்து இருக்கும் பணம் ஒத்துப்போக வேண்டும். தொழில் செய்யவில்லை என்றால், பணம் வந்ததற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். இதை செய்ய தவறினால் மட்டுமே, வருமான வரித்துறை கணக்கில் காட்டாத பணத்திற்கு நிகரான அபராதம் விதிக்ககூடும்" என்றனர்.












Click it and Unblock the Notifications