சில்லாக நொறுங்கிய கனவு.. 40லும் படுதோல்வி அடைந்த நாம் தமிழர் கட்சி.. ஆனால் ஒரே ஒரு நம்பிக்கை.. என்ன?
சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது.
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் சின்னம் மாறி புதிய சின்னத்தில் போட்டியிட்டது.
கரும்பு விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த சின்னம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலை அந்த சின்னத்தின் கீழ்தான் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டது. நாம், தமிழர் கட்சியின் நிரந்தர சின்னம் ஆகிவிடும் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் நினைத்தனர்.

சின்னம் போச்சு: ஆனால் அந்த சின்னத்தை லோக்சபா தேர்தலுக்கு முன் நாம் தமிழர் இழந்தது. போதுமான வாக்கு சதவிகிதம் இல்லை . தேர்தலுக்கு முன்பே சின்னத்தை கேட்கவில்லை. முதல் ஆளாக சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை என்பதே காரணம். இதை காலம் காலமாக இருக்கும் விதிகள். நாம் தமிழர் கட்சி இதை தவறவிட்டது பெரிய அளவில் அந்த கட்சிக்கு எதிராக மாறியது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு கொடுக்கப்பட்டது.
அந்த சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது. இதில் சில இடங்களில் அவர்களின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. கிட்டத்தட்ட 15 இடங்களில் அவர்கள் போட்டியிட, மற்ற இடங்களில் அந்த சின்னம் சுயேட்சை சின்னம் ஆனது.
சீமான் புகார்: இந்த சின்னத்தை பெற சீமான் உச்ச நீதிமன்றத்திற்கு எல்லாம் சென்று போராடினார். ஆனால் சின்னம் கிடைக்கவில்லை. ஏதாவது செய்து சின்னத்தை பெற படாதபாடு பட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகதான் சின்னத்தை இழக்க காரணம் என்று சீமான் கூறினார்.
சின்னம் மாறி.. மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அதே சமயம் கிரவுண்டில் அந்த கட்சிக்கு பெரிய அளவில் பூத் கமிட்டி இல்லை. இத்தனை காலமாக தனியாக போட்டியிட்டு கட்சியை நடத்தினாலும் அவர்களுக்கு தனியாக பூத் கமிட்டி பெரிதாக இல்லை.
இந்த நிலையில்தான் பாஜக தனியாக எடுக்கும் வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு சதவிகிதத்தை எடுக்கும். அப்படி எடுக்கவில்லை என்றால் கட்சியை கலைத்துவிடுவேன் என்று சீமான் சவால் விடும் அளவிற்கு நாம் தமிழர் கட்சி நம்பிக்கையாக இருந்தது.
தோல்வி: ஆனால் கணிப்புகள் நாம் தமிழருக்கு எதிராக வந்தன. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது.
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் சின்னம் மாறி புதிய சின்னத்தில் போட்டியிட்டது. போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நாம் தமிழர் தோல்வி அடைந்து உள்ளது.
ஆனால் 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள், தஞ்சாவூரில் ஹுமாயூன் 1 லட்சம் வாக்குகள், 20 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள். 4 தொகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அசத்தி உள்ளது. இன்று மாலை தேர்தல் ஆணையம் நாம் தமிழரின் வாக்கு சதவிகிதத்தை வெளியிடும். அதன்பின்பே அவர்களின் வாக்கு சதவிகிதம் முன்னேறி உள்ளதா இல்லையா என்பது தெரிய வரும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications