விஜய் கட்சி எவ்வளவு வாக்கு சதவீதம் பெறக் கூடும்? தனித்து போட்டியிட்டு அதிக ஓட்டு வாங்கிய கட்சி எது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலம் என்னவாகும் என தெரிந்து கொள்ளும் முன்பாக, தமிழகத்தில் பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் விஜய் கட்சி எத்தனை சதவீதம் வாக்குகளை பெற்றால் ஆட்சியை பிடிக்க முடியும் அல்லது கிங் மேக்கராக முடியும் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுகவை தோற்கடித்து, பத்தாண்டுகளுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினின் திமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தது. திமுக, அதிமுக கூட்டணிகள் 85 சதவீத வாக்குகளைப் பெற்றன. பிற சிறிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

vijay tvk politics

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், முறையே 2.52 சதவீதமும், 2.35 சதவீத வாக்குகளும் பெற்றன. சிறிய பங்குதான் என்றபோதிலும், அவை பல தொகுதிகளின் முடிவுகளைப் பாதித்தன.

சிறிய கட்சிகளின் தாக்கம்: அதிமுகவின் வாக்கு வங்கியில் இருந்து AMMK வாக்குகளை ஈர்த்தது, இது திமுகவுக்கு சுமார் 20 தொகுதிகளில் சாதகமாகியது. நெருக்கமாக வந்து தோற்றது அதிமுக. அதிமுக கூட்டணி 2016ல் சுமார் 41 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில், 2021ல் 39 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனாலும் அரியணை ஏற முடியவில்லை.

தமிழ்த் தேசியவாதியான சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை, ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகளை உயர்த்தியது. வாக்கு சதவீதம் 6.58 சதவீதமாக இருந்தது. நா.த.க வாங்கிய ஓட்டுக்கள் பல்வேறு தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக கணக்குகளை தவிடுபொடியாக்கியது.

விஜய் அரசியல் பிரவேசம்: இன்னும் 2 ஆண்டுகளில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விஜய் வருகையால் பரபரப்பாகியுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில் தனது சென்னை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் முதல் பெரிய மாநாட்டை விக்கிரவாண்டி, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் இவற்றில் எங்காவது ஒரு இடத்தில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

தமிழக அரசியலை எடுத்துப் பார்த்தால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலுள்ள கட்சிகள் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றி கண்டுள்ளன - அதிமுகவின் எம்ஜிஆர் மற்றும் தேமுதிகவின் விஜயகாந்த் முக்கிய உதாரணங்கள். முதலாமவர் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தார். இரண்டாமவர், நிழல் முதல்வர் என்று அழைக்கப்பட கூடிய உயர் பதவியான எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார். இருப்பினும், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் மாஸ் ஈர்ப்பு இல்லாததால் சரியாகச் செயல்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

வாக்கு வங்கியில் மாற்றம்: அரசியல் போக்கை மாற்றக்கூடிய அர்ப்பணிப்புள்ள ரசிகர் பட்டாளத்துடன் கூடிய வெகுஜன நடிகராக விஜய் தனித்து நிற்கிறார். எம்ஜிஆர், ரஜினிகாந்த்தை தொடர்ந்து இவரும் ஒரு மாஸ் நடிகராகவே பார்க்கப்பட்டது அவருக்கான சாதக அம்சம். விஜய், சிவாஜி கணேசன் போலவோ, கமல்ஹாசன் போலவோ நடிப்புக்காக அறியப்பட்டவர் இல்லை என்பது அரசியலில் அவருக்கான மைலேஜை உயர்த்துகிறது. ஒருவேளை விஜய் தனித்து போட்டியிட்டு வெறும் 10% வாக்குகளைப் பெற்றால் கூட, அவரது கட்சி கிங்மேக்கராக முடியும். அதிமுக, திமுக தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் இவ்வளவு வாக்குகளை தமிழகத்தில் பெற்றதில்லை. கூட்டணி இல்லாமல் தேமுதிக போட்டியிட்ட 2006 தேர்தலில் அக்கட்சி சுமார் 8.5 சதவீதம் வாக்குகளை பெற்றதுதான், சமீப காலத்து பெரிய சாதனை. அந்த வாக்கு வங்கிக்காகவே அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அவரை கூட்டணியில் சேர்க்க முயன்றன என்பது வரலாறு. 2006ல் திமுக தலைமையில் மைனாரிட்டி அரசு அமைய தேமுதிக பிரித்த வாக்கும் ஒரு காரணம் என்பார்கள். எனவே 10 சதவீதம் என்பது தமிழக அரசியலில் எதையும் சாதிக்க வல்ல நம்பர்.

முதல் தேர்தலிலேயே முதல்வராகிவிட முடியும் என்று நம்பும் அளவுக்கு விஜய் அப்பாவி இல்லை. ஆனால் குறைந்தது 10 சதவீதம் வாக்குகளை மொத்த அரசியல் போக்கையும் மாற்றும். இதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+