துண்டு ஒருமுறைதான் தவறும்! அகவிலைப்படி உயர்வு.. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு தரப்போகும் சர்ப்ரைஸ்!
சென்னை: அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படும் அகவிலைப்படி தொகை.. அதாவது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொகை கண்டிப்பாக 2 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த சுழற்சிக்காக 1.2 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) 2% ஆக உயர்த்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதாவது அகவிலைப்படியை 55% ஆக உயர்த்தி மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.

இந்த 2% டிஏ உயர்வு கடந்த 78 மாதங்களில் மிக மிக குறைவானது. ஆனால் இப்போது, 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கத்தில் மேலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. பணவீக்கத்தை வைத்தே அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படும்.
கூடுதலாக இருக்கும்
இது அரசு ஊழியர்கள் இடையே கடுமையான எதிர்வினைகளை சந்தித்தது. பல இடங்களில் அரசு ஊழியர்கள் இந்த சம்பள உயர்வு போதாது என்று போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படும் அகவிலைப்படி தொகை.. அதாவது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொகை கண்டிப்பாக 2 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் 4 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக DA மற்றும் DR இரண்டும் ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும், பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும். இந்த முறை முறை அகவிலைப்படி உயர்வு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி சுழற்சிக்கான அகவிலைப்படி. அடுத்து ஜூலை மாதம் அடுத்த கட்ட அகவிலைப்படி அறிவிக்கப்படும்.
பொதுவாக பணவீக்கத்தை சமாளிக்கவே அகவிலைப்படி உயர்த்தப்படும். இதற்காக பிட்மென்ட் காரணி பயன்படுத்தப்படும். இப்படிப்பட்ட நிலையில் தான் 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கத்தில் மேலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. பணவீக்கம் தொடர்ந்து 3%க்கு கீழ் குறைந்து கொண்டே இருப்பதால், மத்திய ஊழியர்கள் 2% க்கு குறைவாக DA உயர்வை பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக இது 4% ஆக அடுத்த முறை உயர்த்தப்படலாம் என்கிறார்கள்.
ஏற்கனவே நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) உயர்வு அரியர் தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
நிலுவையில் உள்ள மாதங்களின் அடிப்படை ஊதியம் மற்றும் இதுவரை நீங்கள் வாங்கிய டிஏ, இனி வாங்க போகும் டிஏ இடையிலான வேறுபாட்டின் ஆகியவற்றை வைத்து டிஏ நிலுவைத் தொகை கணக்கிடப்படுகிறது.
DA நிலுவைத் தொகை = (புதிய DA % - பழைய DA%) × அடிப்படை ஊதியம் × மாதங்களின் எண்ணிக்கை
பின்வரும் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:
அடிப்படை ஊதியம்: ₹35,400
DA உயர்வு: 4%
மாதங்கள்: 4 (ஜனவரி முதல் ஏப்ரல் வரை)
எனவே அரியர் நிலுவைத் தொகை = 0.04 × ₹35,400× 4 = ₹5,664 இந்த எளிய கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு பணியாளரும் தங்கள் சொந்த அரியர் தொகையைக் கணக்கிடலாம்.
மே மாதம் வழங்கப்பட உள்ள சம்பளத்தில் இந்த அரியர் பணம் வழங்கப்படும். நாடு முழுக்க 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மத்திய அரசின் இந்த பணம் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications