தங்க பிஸ்கட், கோவைக்கு எஸ்கேப்.. சென்னை வங்கி கொள்ளையர்களின் பலே திட்டம்! போலீசார் தூக்கியது எப்படி
சென்னை: கடந்த வாரம் தமிழகத்தையே அதிரச் செய்த வங்கி நகை கொள்ளை குறித்த அதிர்ச்சி பின்னணி வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த வாரம் அரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாக் கார்டன் வங்கியில் செயல்பட்டு வரும் தங்க நகைக் கடன் பிரிவில் மிகப் பெரிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
சுமார் 32 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதில் தொடக்கம் முதலே இதில் பல்வேறு ட்விஸ்ட்கள் அரங்கேறின.

வங்கி கொள்ளை
வங்கியில் வாடிக்கையாளர்கள் போல நுழைந்த கொள்ளையர்கள், முதலில் அங்கிருந்த காவலருக்குக் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களைக் கட்டிப்போட்ட அவர்கள், வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடித்துச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் குறித்து வங்கி கிளை மேலாளர் சுரேஷ் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணை
அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், வங்கியில் பணியாற்றிய முருகன் தான் இதில் முக்கிய புள்ளி என்பதைச் சீக்கிரமே கண்டறிந்தனர். சம்பவம் நடந்த அன்று வங்கிக்கு முதலில் வந்தவர் முருகன். அங்கிருந்த ஊழியர்களுக்கு முருகனை தெரியும் என்பதால் அவர்கள் சந்தேகம் கொள்ளவில்லை. அவர் தான் காவலாளியையும் குளிர்பானம் கொடுத்துள்ளார். காவலாளி மறுத்த போதிலும் வலியுறுத்திக் குடிக்க வைத்துள்ளார்.

வாடிக்கையாளர்
இதற்குள்ள முருகனின் நண்பர்களும் வங்கிக்கு வந்துவிட, காவலாளி மயங்கிய உடன் அங்கிருந்தவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப் போட்டு உள்ளனர். அதன் பின்னரே லாக்கரை உடைத்து நகையைக் கொள்ளை அடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். அதன் பின்னர் வங்கிக்கு ஒரு வாடிக்கையாளர் வந்தபோது தான் இந்த கொள்ளை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீசார் இந்த விவகாரத்தில் முதல் வங்கியில் இருந்த சிசிடிவி காட்சியைத் தான் சோதனை செய்துள்ளனர்.

சிசிடிவி
இருப்பினும், முருகன் அங்கு பணியாற்றியவர் என்பதால் முதல் வேலையாக சிடிடிவி கேமராக்கள் மீது ஸ்ப்ரே அடித்துவிட்டனர். நகையைக் கொள்ளை அடித்த அவர்கள் முதலில் எடுத்த உடன், குரோம்பேட்டையில் லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்துள்ளனர். கொள்ளை நகையை உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றுவதே அவர்கள் திட்டம். இதற்காகத் தனி மெஷின் ஒன்றையும் கோவையைச் சேர்ந்த நகைக்கடன் உரிமையாளர் உதவியுடன் வாங்கி உள்ளனர்.

சொதப்பிய திட்டம்
இருப்பினும், திடீரென அதிலிருந்து புகை கிளம்பவே அங்கிருப்பவர்கள் சந்தேகம் கொள்வார்கள் என அஞ்சியுள்ளனர். இதையடுத்து கொள்ளை அடித்து நகைகளை அங்கேயே பிரித்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அதன் பின்னரே கொள்ளையில் ஈடுபட்டு இருந்த சந்தோஷ், தனது உறவினரான போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜை சந்தித்து கொள்ளை அடித்த நகையில் ஒரு பகுதியை அவரிடம் கொடுத்துள்ளார். இதையும் விசாரணையில் கண்டுபிடித்த போலீசார் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் இருந்தும் 3.5 கிலோ நகையைப் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல சந்தோஷ் பாட்டில் வீட்டிலும் 2.6 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை
நகைகளை உருக்கம் திட்டம் தோல்வி அடைந்ததால் கொள்ளையில் ஈடுபட்ட சூர்யா நகைகளுடன் கோவை செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு நகையைத் தங்கக் கட்டிகளாக மாற்றிவிடலாம் அதன் பின் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்பது அவரது திட்டம். ஆனால், அதற்கு முன்பே துரிதமாக செயல்பட்ட போலீசார் கொள்ளையர்களைப் பிடித்துவிட்டனர். கொள்ளையர்கள் மட்டும் சென்னைக்கு வெளியே சென்று இருந்தால், அவர்களைப் பிடிப்பதில் மேலும் சிக்கலும் தாமதமும் ஏற்பட்டு இருக்கும்.

மறைமுக தொடர்பு
கொள்ளையில் மாஸ்டர் மைண்டாக இருந்த முருகன் அவரது உறவினர்களையும் இதில் ஈடுபடுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் நகைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு விட்டது. இருப்பினும், இதில் மேலும் சிலருக்கு மறைமுகமாகத் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் மீதும் வரும் நாட்களில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications