1950களில் வறுமை.. இன்று மொத்த நாட்டிற்கும் பெருமை.. தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேறியது எப்படி
சென்னை: கல்வி மற்றும் பொருளாதாரத்தில் இந்தியளவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரம் எட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 1960 ஆம் ஆண்டில் கல்வி பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த தமிழ்நாடு தற்போது நாட்டின் ஜிடிபியில் 2 இடம் வகிக்கிறது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு அமெரிக்காவை விட எப்படி முன்னிலை வகிக்கிறது, பொருளாதார வளர்ச்சிக்கு, சமூக விடுதலை எந்தளவுக்கு முக்கியம் என்பதை பொருளாதார நிபுணர் சுரேஷ் சம்பந்தம் விளக்கியுள்ளார்.
மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு லேப்டாப் வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் சம்பந்தம், "தி எகனாமிஸ்ட் பத்திரிகை (The Economist Magazine) தமிழ்நாட்டை சூப்பர் ஸ்டேட் என்று அறிவித்துள்ளனர். ஆனால் வரலாற்றை எடுத்து பார்த்தால் அது சூப்பர் ஸ்டேட்டாக இருந்ததில்லை. இந்தியா சுதந்திரமடைந்த 1950 காலங்களை எடுத்து பார்த்தால், ஜிடிபி பட்டியலில் தமிழ்நாடு கடைசியில் இருந்து இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் 2025 ஆண்டில் டாப்பில் இருந்து இரண்டாம் இடத்தில் உள்ளோம்.

வறுமை, கல்வி
தமிழ்நாட்டில் 69 சதவீதம் வறுமை இருந்தது. அப்படியிருந்த தமிழ்நாடு இன்று மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் பொருளாதாரம் இயற்கை வளம், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருந்தன. தமிழ்நாடு தொழில்துறை, அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தது. இதுதான் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. மக்கள், இளைஞர்களை முதலீடாக முன்னிறுத்தினார்கள்.
1960 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாகவும், படிக்காதவர்கள் 80 சதவீதமாகவும் இருந்தனர். 2025 ஆம் ஆண்டில் படித்தவர்கள் 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1960 ஆம் ஆண்டில் 8 சதவீதம் பெண்கள்தான் படித்து கொண்டிருந்தனர். 2025 ஆம் ஆண்டில் 74 சதவீதம் பெண்கள் படிக்கிறார்கள். பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, மகிழ்ச்சி எல்லாவற்றையும் கொண்டுள்ளது.
தொழிற்சாலை புரட்சி
தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இங்கு 43 சதவீதம் பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள். தமிழ்நாட்டிற்கு அடுத்துள்ள கர்நாடகாவில் 12 சதவீதம் பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள். இந்த இடைவெளியே பல செய்திகளை சொல்லும். லெதர் உற்பத்தியில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 47 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது.
இதேபோல ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தலா 42 சதவீதம், ஜவுளி உற்பத்தியில் 27 சதவீதம், இயந்திர உற்பத்தியில் 18 சதவீதம் தமிழ்நாடு பங்காற்றுகிறது. குறைந்தபட்சம் 3-4 ஆண்டு பட்டப்படிப்பு விகிதத்தில் அமெரிக்காவை விடவே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஜிஇஆரில் அமெரிக்கா 43 சதவீதமும், தமிழ்நாடு 51 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த ஜிஇஆர் 27 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவம்.. தகவல் தொடர்பு
மருத்துவத்தில் புரட்சியே நடந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் தரநிலைப்படி, உலகளவில் 1,000 பேருக்கு 1 மருத்துவர் தான் உள்ளார். அமெரிக்காவில் கூட 500 பேருக்கு 1 மருத்துவர் என்கிற நிலைதான் உள்ளது. தமிழ்நாட்டில் 250 பேருக்கு 1 மருத்துவர் உள்ளனர். தகவல் தொடர்பிலும் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. கலைஞர் தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 40 சதவீதம் பேரிடம் தான் டிவி இருந்தது.
அந்த திட்டம் மூலம் 87 சதவீதம் பேர் வீட்டில் டிவி வந்தது. இப்போது 96 சதவீதம் பேரிடம் டிவி உள்ளது. 80 சதவீதம் பேர் இணைய வசதியை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்கனவே 6 விமான நிலையங்கள் உள்ளன. மேலும் 2 விமான நிலையங்கள் வரப்போகின்றன. வளர்ச்சியடைந்த காரணத்தால் தான் இது சாத்தியம். தமிழ்நாடு மட்டும் தான் சமூக வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் ஒன்றாக பார்க்கிறது.
பொருளாதார வளர்ச்சிக்கு சமூக புரட்சி
மகாராஷ்டிரா, குஜராத் பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்துள்ளன. அவர்களுக்கு சமூகம் சார்ந்த அக்கறை இல்லை. மேற்கு வங்கம், கேரளா கூட ஊழியர் சார்ந்த பொருளாதாரம் தான் உள்ளது. இவை இரண்டுமே நல்லதல்ல. மாநிலத்தை உலகளவில் கொண்டு சென்றதால் தான் இதை பெருமையுடன் திராவிட மாடல் என்கிறோம். இந்த சாதனைகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூன்று பேரும் காரணம்.
பெரியார் சமூக புரட்சியை உருவாக்கினார். அண்ணா எல்லோருக்கும் அதிகாரம் வழங்கும் அரசியல் புரட்சியை உருவாக்கினார். கருணாநிதி தொழில்துறையில் புரட்சியை உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலகம் உங்கள் கையில் என்று இளைஞர்களிடம் வாய்ப்பை வழங்கி அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். சமூக விடுதலை இல்லாமல் பொருளாதாரம் ஏற்றமடையாது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம்" என கூறினார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications