திருப்பூர் + தூத்துக்குடி.. மொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் அசத்தல் சம்பவம்! இதெல்லாம் வேறலெவல்
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது சிறிய.. மூன்றாம் கட்ட நகரங்கள் எல்லாம் வேகமாக வளர தொடங்கி உள்ளன. பல்வேறு மாவட்டங்களில் புதிய ஐடி பார்க்குகள், சிப்காட், நியோ டைட்டில் பார்க்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஒரு காலத்தில் சென்னை, கோவை மட்டும் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் தற்போது பல சிறிய மாவட்டங்கள், 3 டயர் சிட்டிகளில் சிப்காட் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளன.தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழக அரசு, திருப்பூரில் அதிநவீன டைடல் பூங்காவைக் கட்டி வருகிறது. விரைவில் இந்த ஐடி பார்க் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஐடி புரட்சியை இரண்டாம் நிலை நகரங்களுக்கு தமிழக அரசு கொண்டு செல்கிறது.
66,139 சதுர அடி பரப்பளவில், ஒவ்வொரு தளமும் 6,500 சதுர அடியில் 8 மாடிகளைக் கொண்ட இந்த வசதி இந்த ஆண்டு டிசம்பருக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் திருப்பூரில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிய வேலை வாய்ப்புகளை கொண்டு வரும்.
அதேபோல் தூத்துக்குடியில் ஐடி நியோ பார்க் கட்டப்பட்டு வருகிறது. இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
வளரும் சிப்காட்: தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் அமைக்கப்படும் சிப்காட் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் சிப்காட் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைய சிப்காட் மிகப்பெரிய காரணம் ஆகும்.
அந்த வகையில் 8 இடங்களில் சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 8 புதிய SIPCOT பூங்காக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது:
1. ஸ்ரீபெரும்புதூர்- 750 ஏக்கர்
2. சென்னை ORR - 200 ஏக்கர்
3. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி - 1,000 ஏக்கர்
4. பெரம்பலூர்- 100 ஏக்கர்
5. திருவெறும்பூர், திருச்சி- 150 ஏக்கர்
6. கும்மிடிப்பூண்டி, சென்னை - 1,500 ஏக்கர்
7. அரியலூர்- 150 ஏக்கர்
8. மன்னார்குடி- 150 ஏக்கர்
அசத்தல் முடிவு: அதன் ஒரு கட்டமாக பின் வரும் நகரங்களை புதிய தொழில் பூங்காக்களின் அமைப்பை சிப்காட் அமைக்க தொடங்கியுள்ளது.
1. திருமுடிவாக்கம், சென்னை
2. தேனி (உணவு+ மல்டி பார்க்)
3. காட்பாடி
4. பணப்பாக்கம், ராணிப்பேட்டை
5. வாரப்பட்டி, கோயம்புத்தூர்
6. தருமபுரி
7. நாகப்பட்டினம்
8. பாடலூர், பெரம்பலூர்
9. விருதுநகர்- பி.எம்.மித்ரா டெக்ஸ்டைல் பார்க்
10. செங்காத்தாகுளம், திருவள்ளூர்
11. சிவகங்கை (2 கட்டங்கள்)
12. ஏ.சாத்தனூர் SEZ, கள்ளக்குறிச்சி
13. வைப்பார், தூத்துக்குடி
14. வேலாயுதபுரம், தூத்துக்குடி
15. மணக்குடி, ராமநாடு
16. சேலம் ஜவுளி பூங்கா
17. தலைவாசல், கள்ளக்குறிச்சி
18. சக்கரகோட்டை, ராமநாடு
19. மணல்லூர் (EV & EMC), திருவள்ளூர்
அடிக்கல் நாட்டு விழா: இது போக தமிழ்நாட்டில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 6,035 ஏக்கரில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
1. விருதுநகர்
2. தருமபுரி
3. தேனி
4. சிவகங்கை
5. தூத்துக்குடி (வைப்பார்)
6. ராமநாதபுரம்-1
7. ராமநாதபுரம்-2
ஆகிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐடி பார்க்: ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications