குடும்ப அட்டையில் உங்கள் குழந்தைகளின் பெயரை சேர்ப்பது இனி ரொம்ப ஈஸி.. இதை மட்டும் பண்ணுங்க!
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டில் உங்கள் குழந்தைகளின் பெயரை சேர்ப்பது மிகவும் எளிது. நீங்களே உங்கள் வீட்டில் இருந்தோ அல்லது தனியார் இசேவை மையங்களிலோ எளிதாக உங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க முடியும். எப்படி என்பதை பார்ப்போம்.
முன்பெல்லாம் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று காத்திருந்து ஒரு நாள் முழுக்க அலைய வேண்டியதிருக்கும். இப்போது அப்படி இல்லை. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே சேர்க்க முடியும். மக்களின் அலைச்சலை தவிர்க்க டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது.

சரி, குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க என்ன செய்ய வேண்டும். முதலில் tnpds இன் இணையதளத்திற்கு ( https://www.tnpds.gov.in/) செல்ல வேண்டும். அதில் வலதுபுறத்தின் கீழ் பார்த்தீர்கள் என்றால் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்று இருக்கும்.
அதில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை தொடர்பான சேவைநிலை அறிய என ஐந்து ஆப்சன் இருக்கும். இந்த ஐந்து சேவைகளையும் ஆன்லைனிலேயே செய்ய முடியும். அதில் உறுப்பினரை சேர்க்க என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் ரேஷன் கார்டு வாங்குவதற்காக கொடுத்த அதாவது ரேஷன் கார்டு உடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை பதிவிடவேண்டும். அப்படி பதிவிட்டால் உங்கள் செல்போனுக்கு ஒரு ஒடிபி வரும்,. அதனை 300 வினாடிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் தோன்றும் திரையில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த குடும்ப உறுப்பினர்களின் விவரம் இருக்கும். உதாரணமாக பெயர், குடும்ப அட்டை எண், நியாய விலை குறிடு, மற்றும் ஆதார் அட்டை இணைப்பு எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
உங்கள் குடும்பத்தின் தலைவர் மற்றும் அனைவரது விவரங்களும் இடம் பெற்றிருக்கும். கடைசியாக குடும்ப உறுப்பினரை சேர்க்க அவர்களின் விவரங்களை உங்களிடம் இணையதளம் கேட்கும்,. அதற்கு ஆதார் அல்லது பிறப்பு சான்றிதழ் இதில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.
பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. அதேநேரம் பிறந்த சான்றிதழை அதில் இணைத்த பின்னர் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது என்று திரையில் தோன்றும் பின்னர் 20 நாட்கள் கழித்து குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையில் உங்கள் குழந்தையின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் 30 நாளில் உங்கள் குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். நீங்கள் குடும்ப அட்டையின் நிலையை தெரிந்து கொள்ள குறிப்பு எண் கொடுத்திருப்பார்கள். அதை வைத்து நீங்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
வெற்றிகரமாக குடும்ப அட்டையில் உங்கள் குழந்தையின் பெயர் சேர்க்கை முடிந்த பின்னர், மறுபதிப்பு என்ற ஆப்சனை தேர்வு செய்து ரூ.20 செலுத்தி புதிய குடும்ப அட்டை வாங்கி கொள்ளலாம். புதிய நகல் அட்டை வாங்க தாசில்தார் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications