ஆரம்பமே இப்படியா.. "தளபதியா.. தலைவரா.." பிரஸ் மீட்டில் கன்பியூஸ் ஆன புஸ்ஸி ஆனந்த்.. அடடே இதை பாருங்க
சென்னை: நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது அவரே ஒரு விஷயத்தில் கன்பியூஸ் ஆனார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு கடந்த சில காலமாகவே இருக்கிறது. அவரது சமீபத்திய செயல்பாடுகளும் கூட அரசியல் வருகையை நோக்கியே இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு பொதுத்தேர்வில் அதிக மார்க் வாங்கிய மாணவர்களுக்குப் பரிசை வழங்கினார். அப்போது தொகுதி வாரியாக 234 தொகுதிகளில் அதிக மார்க் பெற்றவர்களே அழைக்கப்பட்டனர்.
விஜய்: அதைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி மற்றும் நிவாரணத்தையும் விஜய் அளித்தார். இது மட்டுமின்றி பல்வேறு நிகழ்வுகளை நாம் சொல்லலாம். மாநிலம் முழுக்க பதிப்பகங்களை ஆரம்பிக்க உத்தரவிட்டது. தலைவர்கள் பிறந்த நாளுக்கு அவர்களின் சிலைக்குச் சென்று மக்கள் மன்றத்தினரை மரியாதை செலுத்தச் சொன்னது என்று அவரது செயல்பாடுகளை அரசியலை நோக்கியே இருந்தது.
இடையே பனையூர் இல்லத்திலும் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து அவ்வப்போது ஆலோனை நடத்தி வந்தார். இதற்கிடையே விஜய் பிப். மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியானது. அதன்படி இன்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் கட்சியைப் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த்: இதற்கிடையே பிரஸ் மீட்டில்வி புஸ்ஸி ஆனந்த் பேசிய பேச்சு இப்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதாவது விஜயை அவரது ரசிகர்கள் தளபதி என்றே அழைப்பார்கள். ஆனால், இப்போது அவர் கட்சியை ஆரம்பித்துவிட்டதால்.. தலைவர் என்று அழைப்பதா.. இல்லை தளபதி என்றே அழைப்பதா என்பதில் குழப்பம் இருப்பது போலத் தெரிகிறது. இன்று புஸ்ஸி ஆனந்த் பேச்சியிலேயே இதைக் கவனிக்க முடிந்தது.
டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், "தளபதி... எங்கள் தலைவர்.. தளபதி.." என்று மாறி மாறி சொல்லி ஆரம்பித்த அவர், திடீரென சில நொடிகள் மவுனமானார். பிறகு மீண்டும் தொடர்ந்து அவர், "இப்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன்.
தளபதியா... தலைவரா: எந்த தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளீர்கள் என்ற கேள்விக்கு மீண்டும் கன்பியூஸ் ஆனார் புஸ்ஸி ஆனந்த்.. "தளபதி.. தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில் எல்லாமே எல்லாமே தெளிவாக சொல்லியுள்ளார்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அதாவது விஜயை தலைவர் என்று அழைக்க வேண்டுமா அல்லது தளபதி என்று அழைக்க வேண்டுமா என்பதில் சிறு குழப்பம் இருக்கிறது.
முன்னதாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். அதேநேரம் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் விஜய் தனது அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications