30 நாளில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தனி பட்டா வழங்காவிட்டால்.. ஐகோர்ட் உத்தரவு தெரியுமா?
சென்னை: கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்ட கோரி விண்ணப்பத் தேதியிலிருந்து எத்தனை நாட்களுக்குள்ளாக பட்டா வழங்க வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். உண்மையில், 30 நாள்களுக்குள் நிலம் அளந்து உட்பிரிவு செய்து தனி பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் ரூ.2,500/= அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனிப்பட்டா வழங்க மறுத்தால், நீதிமன்ற ஆணையுடன் முறையிட்டு உடனடியாக நிவாரணம் பெற முடியும்.
அந்த காலத்தில் நிலங்களை பொறுத்தவரை கூட்டுப்பட்டாவாகவே இருக்கும். உதாரணமாக ஒரு நிலம் சர்வே நெம்பர் 1070 ல் 1.00 ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால், அது 10 பேருக்கு சொந்தம் என்று வைத்துக் கொள்வோம் . அந்த குறிப்பிட்ட சர்வே நம்பரில், வருவாய்த்துறை பதிவேடுகளில் எல்லோருடைய பெயரும் மொத்தமாக குறிக்கப் பட்டுதான் இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் பட்டா கேட்டால் அந்த சர்வே நெம்பரில் எல்லோர் பெயரும் போட்டு வழங்கப்படும் பட்டாதான் கூட்டு பட்டா ஆகும் . யார் யாருக்கு எவ்வளவு நிலம் பாத்தியம் என்று தெரியாது. 10 பேருக்கும் உரிமை என்பது மட்டும் பதிவாகி இருக்கும்.

அதேநேரம் இன்றைய சூழலில் வீட்டு மனை வாங்கும் போது, ஒருவரின் பெயரில் தான் மொத்த நிலமும் இருக்கிறது. தனி பட்டா இருக்கிறது என்றாலும், அந்த ஒரு ஏக்கர் நிலத்தை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்யும் போது, 5 சென்ட், 3 சென்ட் என்று பிரித்து இருப்பார்கள். அப்படி பிரிக்கப்பட்டநிலத்தின் ஸ்கெட்ச் அடிப்படையில் சர்வே நம்பரில் உட்புரிவு செய்து தனிப்பட்டா வழங்குவார்கள். பத்திரத்தில் உள்ளபடி தனித்தனியாக தாசில்தாரால் பட்டா வழங்கப்படும். இதுதான் தனிப்பட்டா ஆகும்.
இதில் ஒரு நிலம் வாங்கும் போதே சரியாக நிலத்தை அளந்து பார்த்து அதன் பின், பூமியில் நிலத்தை விற்பனை செய்பவரின் இடம் எவ்ளவு என்பதற்கான அளவை சரி பார்த்து வாங்க வேண்டும். விற்பவரின் கிரய பத்திரத்தில் ஒரு அளவு, உண்மையாள அளவு என வேறு விதமான அளவு இருந்தால், உண்மையாள அளவு (actual possession) அளவை தான் விலைக்கு வாங்க வேண்டும், அதை தான் புதிய கிரய பத்திரத்தில் குறிக்க வேண்டும். பூமியில் இல்லாத நிலத்தை பத்திரத்தில் குறித்து விட்டு பக்கத்து நிலத்துக்காரனிடம் போய்க் கேட்க கூடாது..
அப்படி செய்தால் நீதிமன்றத்தில் போய் வழக்கு போட்டு வாழ்நாள் முழுக்க தொல்லையை சந்திக்க வேண்டிய நிலை வரும். செக்கு பந்தி என்ற நிலத்தின் எல்லை பவுண்டர்களை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு பழைய பத்திரத்தில் உள்ளதையே புதிய பத்திரத்தில் குறிப்பிட்டு வாங்கக்கூடாது. அப்படி செய்தால் எத்தனை வருடம் அலைந்தாலும் தீர்வு கிடைக்காது.
சரியாக கிரயம் பெறும் நிலத்தின் பேரில் தான் கிராம நிர்வாக அலுவலரால் சிட்டா, ' ஏ' ரிஜிஸ்டர் நகல், அடங்கல் நகல் (நிலத்தைப் பற்றிய எல்லா விவரங்களும் இதில் அடங்கி இருப்பதால் இது அடங்கல் என்று பெயர்) மற்றும் நில வரை படம் (Field Measurement Book, FMB ) ஆகியவை இருக்க வேண்டும். அந்த நகல்களை விஏஓ ஆபிஸில் போய் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. அதன்பிற்கு கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டாவிற்கு பத்திரத்தின்படி விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்து பட்டா வாங்கினால் தான், நிலத்தில் வீடு கட்ட பில்டிங் பிளான் அப்ரூவல் கிடைக்கும். தனிப்பட்டா இல்லாவிட்டால் நிலத்தில் எதுவும் செய்ய முடியாது.
சரிஇ கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்ட கோரி விண்ணப்பத் தேதியிலிருந்து எத்தனை நாட்களுக்குள்ளாக பட்டா வழங்க வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். உண்மையில், 30 நாள்களுக்குள் நிலம் அளந்து உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் ரூ.2,500/= அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனிப்பட்டா வழங்க மறுத்தால், நீதிமன்ற ஆணையுடன் முறையிட்டு உடனடினாக நிவாரணம் பெற முடியும். ஒரு மாதத்தில் தனிப்பட்டா தராவிட்டால், நீங்கள் நீதிமன்ற ஆணையை குறிப்பிட்டு முறையிடலாம். அதில் சிக்கல் இருந்தால் அவர் தெரிவிப்பார். இல்லாவிட்டால் கண்டிப்பாக தனிப்பட்டா தந்தாக வேண்டும்.
ஒரு வேளை சர்வயேர் நில அளவையில் தவறு செய்தால், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நில அளவை உதவி இயக்குநருக்கும் மறு அளவையோரி அப்பீல் செய்யலாம். தாசில்தார் வழங்கிய பட்டாவில் பரப்பளவு, உரிமையாளர் பெயர் இதில் பிரச்சனை, கோர்ட் தீர்ப்பு அமல் செய்து பட்டா வழங்காமை என்றால் கோட்டாட்சியரை அணுக வேண்டும், அதில் நிவாரணம் இல்லை என்றால், மாவட்ட வருவாய் அலுவலருக்கும் மேல்முறையீடு செய்யலாம். அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் சிவில் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications