மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்.. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு.. யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டம் 2 மாதத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தமிழக பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் யார் எல்லாம் இதற்கு இனி விண்ணப்பிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதை பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு சார்பாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அவர் மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் பலவற்றை வெளியிட்டார்.

தமிழக பட்ஜெட்டில் பெண்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும். விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது.
பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும்.
ரூ.77 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும், என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. புதுமைப் பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 10,000 சுய உதவி குழுக்கள் வழியாக ரூ.37,000 கோடி கடனுதவி வழங்கப்படும், போன்ற பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமை தொகை திட்டம் 2 மாதத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் யார் எல்லாம் இதற்கு இனி விண்ணப்பிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதை பற்றி இங்கே பார்க்கலாம்.
அடுத்த சில நாட்களில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
பின்வரும் பிரிவை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
1. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும்.
2. புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்
3. கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்
4. தவறான காரணங்களால் பெயர் விடுபட்டவர்கள்.
5. அரசு அல்லாத சில கூட்டுறவு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.
கட்டுப்பாடுகள் என்னென்ன
1. ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்படாது.
2. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் கார்டு வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும்.
3. கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டு இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் கார்டு நீக்கப்படும்.
4. அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது.
5. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications