300 யூனிட் மின்சாரம் இலவசம்.. அள்ளித்தரும் அரசு.. இதை மட்டும் பண்ணுங்க.. இனி இபி பில்லே இருக்காது
சென்னை: வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பாக இங்கே விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் எப்படி சேருவது.. எப்படி இலவச மின்சாரம் பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.
1. உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும்.

2. பொதுவாக மேற்கூரையில் சோலார் அமைக்க சதுர அடி பொறுத்து 50 ஆயிரம் முதல் 2-3 லட்சம் வரை செலவு ஆகும்.
3. மேற்கூரையில் சோலார் அமைத்தால் வீட்டில் பெரும்பாலும் மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும். மழை காலம், பனி காலத்தில் 1-2 மணி நேர மின்சார நிலையத்தின் மின்சார சப்ளை தேவை மட்டும் இருக்கும்.
4. நீங்கள் மேற்கூரையில் சோலார் வைத்துள்ளதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.
5. அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அந்த குறைந்த பட்ச மின்சார தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம்தான் இது.
6. பொதுவாக மேற்கூரையில் சோலார் இருந்தால்.. மாதம் உங்களுக்கு மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் 100 யூனிட் கூட அவசியம் இருக்காது. இருந்தாலும் நீங்கள் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்த முடியும்.
7. மேற்கூரையில் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பயன்கள் என்னென்ன?: ரூ.15,000 முதல் ரூ. 18,000 ரூபாய் இலவச சோலார் மின்சாரத்தில் இருந்து ஆண்டுக்கு சேமிக்கலாம். உபரி மின்சாரத்தை மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்காக விநியோக நிறுவனங்களுக்கு கொடுக்கலாம்.
சோலார் பேனல்களை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் பல விற்பனையாளர்களுக்கு தொழில்முனைவு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சோலார் பேனல்களை நிறுவுதல், உற்பத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன் கொண்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அரசுக்கு மின்சார செலவு குறைவு. இதற்கு விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு ஏற்ற கூரையுடன் தங்களுடைய சொந்த குடியிருப்பு இருக்க வேண்டும்/ விண்ணப்பதாரர்கள் சரியான மின் இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சோலார் பேனல்களுக்கு வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.
மேற்கூரை சோலார் திட்டத்தின் கீழ், சோலார் பேனல்களை நிறுவுவதற்கு அரசாங்கம் பின்வரும் மானியங்களை வழங்கும்:
2 kW வரை - ரூ. ஒரு கிலோவாட்டிற்கு 30,000
3 kW வரை கூடுதல் திறனுக்கு - ரூ. ஒரு கிலோவாட்டிற்கு 18,000
3 kW க்கும் அதிகமான அமைப்புகளுக்கு மொத்த மானியம் - அதிகபட்சம் ரூ. 78,000 ரூபாய் வரை வழங்கப்படும்
வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனால் சோலார் அல்லாமல் நீங்கள் நேரடியாக பெறக்கூடிய இபி மின்சாரத்தில் உங்களுக்கு 300 யூனிட் இலவசமாக வழங்கப்படும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications