தட்கல் வெயிட்டிங் லிஸ்ட் கட்டணம் ரூ.1544 கேன்சல் ஆனதால் ₹1290.. சின்ன தவறால் ரூ.250 அவுட்
சென்னை: ரயிலில் கடைசி நேரத்தில் பலர் தட்கலில் புக்கிங் செய்கிறார்கள். இதற்கு வழக்கமான கட்டணத்தைவிட அதிகமாகும். வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு 295 ரூபாய் கட்டணம் ஆகும்.. ஆனால் தட்கலில் டிக்கெட் கட்டணம் 455 ரூபாய் கட்டணம் அகும்.. அதாவது ஒரு மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும்.. இந்நிலையில் தட்கல் வெயிட்டிங் லிஸ்டில் இருந்து கேன்சல் ஆனால் டிக்கெட்டுக்கு 80 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நான்கு பேர் குடும்பத்திற்கு டிக்கெட் கிடைக்காமலயே 250 ரூபாய் பறிபோகிறது. இதை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது. ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை, 14ம் தேதி பொங்கல், 15ம் தேதி மாட்டுப்பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாப்ப்பட்டது பொங்கல் பண்டிகைக்கு ஜனரி 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஒன்பது நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டிருந்தது.

பலரும் சொந்த ஊருக்கு சென்று வந்தார்கள். பலர் திரும்பும் போது, ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்தார்கள். அதுவும் தட்கலில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்தார்கள். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. மாறாக ஆர்வ மிகுதியில் புக்கிங் செய்த பலருக்கு வெயிட்டிங் லிஸ்ட் என்று தான் வந்தது.
எனினும் டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடும்பத்திற்கே முன்பதிவு செய்தார்கள். ஆனால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ரயில் டிக்கெட் கிடைக்காமல் போனதுடன், கேன்சல் ஆனது. ஆனால் ஸ்லீப்பர் கோச்சில் ஒரு டிக்கெட்டிற்கு 80 ரூபாய் என நான்கு டிக்கெட்டிற்கு 240 ரூபாய் போனது. அதாவது டிக்கெட்டுக்கும்கிடைக்கவில்லை. முன்பதிவு செய்த ஒரு நாளில் தானாகவே ரத்தானதாலும் டிக்கெட்டிற்கு 80 ரூபாய் திரும்ப கிடைப்பது இல்லை..
குடும்பமாக ரயிலில் செல்ல ஆசைப்பட்டவர்களுக்கு சராசரியாக 250 ரூபாய் டிக்கெட் கிடைக்காமலேயே பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை திடீரென ஏற்படுத்தப்படவில்லை.. பல ஆண்டுகளாக உள்ள நடைமுறை என்றாலும், டிக்கெட் கிடைக்காமல் , தானாக ரத்தானால் முழு பணத்தையும் பிடித்தம் இல்லாமல் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்து ₹1724 பணம் செலுத்தினேன். காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. எனவே சில நிமிடங்களில் அந்த டிக்கெட்டை ரத்து செய்தேன். ₹1635 பணம் தான் திரும்ப கிடைத்தது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பு - ₹89.. இந்த புதுமையான நிதி திரட்டும் முறைக்கு நன்றி, மோடி ஜி!" என்று கூறியுள்ளார்.
தட்கலில் வெயிட்டிங் லிஸ்டில் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் புக்கிங் கன்பார்ம் ஆனால் மட்டும் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் ஆப்சனை செலக்ட் செய்யுங்கள். ஆட்டோ அப்கிரடேசன் என்ற ஆப்சனுக்கு கீழ் உள்ள ஆப்சனை கட்டாயம் கிளிக் செய்யுங்கள். இப்படி செய்தால், தட்கலில் வெளியிட்டிங் வந்தால் உங்களிடம் முன்பதிவு செய்யவா என்று கேட்கும்.. பரவாயில்லை என்று நீங்கள் புக்கிங் செய்தால் மட்டுமே புக் ஆகும். இல்லாவிட்டால் புக்கிங் ஆகாது.. பணம் எடுக்க மாட்டார்கள். அப்படியே எடுத்தாலும் முழு பணமும் ஓரிரு நாளில் வந்துவிடும். மாறாக முன்பதிவு செய்யும் போது, புக்கிங் கன்பார்ம் ஆனால் மட்டும் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் ஆப்சனை செலெக்ட் செய்யாமல் விட்டால், வெயிட்டிங் லிஸ்ட் வரும்.. உங்கள் பணமும் போய்விடும்...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications