உங்க போன் மிஸ் ஆகிடுச்சா? அடுத்த செகண்டே கூகுள் பே-வை பிளாக் பண்றது எப்படி? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சென்னை: செல்போனில் கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் இல்லாத செல்போன்களே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. இப்படி இருக்கையில், செல்போன்கள் தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டாலோ அதில் உள்ள யுபிஐ ஐடியை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இதை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை செய்தால் அதில் இருந்து விடுபடலாம்.
தகவல் தொழில் நுட்பம் பெருகிவிட்ட இந்த காலத்தில் செல்போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மக்களின் கைகளில் ஆறாம் விரலை போல செல்போன்கள் மாறிவிட்டது. தொலைபேசி அழைப்பு மேற்கொள்வது மட்டும் இன்றி பொழுதுபோக்கு அம்சங்கள், வங்கி பரிவர்த்தனைகள் என அனைத்து வேலைகளையும் ஒரு செல்போன் கையில் இருந்தால் முடித்து விடலாம்.

செல்போன்களில் யுபிஐ பரிவர்த்தனை வசதிகள் வந்த பிறகு யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் எந்த சிரமும் இல்லாமல் சில வினாடிகளில் அனுப்ப முடிகிறது. முன்பெல்லாம் வங்கியில் கால் கடுக்க நின்று செல்லான் எழுதி கொடுத்து பணத்தை வங்கி கணக்கில் அனுப்பிய கால கட்டம் எல்லாம் கிட்டத்தட்ட மலையேறிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு யுபிஐ வசதியால் வங்கி பரிவர்த்தனையில் பெரும் புரட்சியே ஏற்பட்டு இருக்கிறது.
யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களின் வங்கி கணக்கு எண்கள் கூட தேவை இல்லை. வெறும் போன் நம்பர் மட்டும் போதும்.. அடுத்த நொடியோ பணத்தை அக்கவுண்டில் இருந்து அனுப்பி விட முடியும்.. செல்போன் ரீசார்ஜ், மின் கட்டணம் ஆகியவற்றையும் யுபிஐ பரிவர்த்தனையும் எளிதில் செல்போனிலே செய்ய முடியும். இப்போது கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனை வழங்கும் செயலிகள் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது.
ஆனால், அதேவேளையில் எதிர்பாராத விதமாக செல்போன்கள் திருடு போய்விட்டால், செல்போனில் இருக்கும் யுபிஐ ஐடி வழியாக நமது அக்கவுண்டில் இருக்கும் பணம் அபேஸ் செய்யப்படலாம்.. எனவே செல்போன் தொலைந்து விட்டால் உடனடியாக யுபிஐ ஐடியை பிளாக் செய்வது அவசியம் என்று அறிவுறுத்துகிறார்கள் வங்கி அதிகாரிகள். பாதுகாப்பு காரணங்களுக்காக இது அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
இல்லாவிடில் நமது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் காலியாகி பூஜ்ஜியம் ஆகிவிடக் கூடும். செல்போன் தொலைந்து விட்டால் உடனடியாக பயனர்கள் கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கூகுள் பே வைத்து இருந்தால் 1-800-419-0157 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை கொடுத்து யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம்.
போன் பே யூசர் என்றால் 0806-8727-374 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பேடிஎம் யூசர் என்றால் 0120-04456-456 -என்ற எண்ணை அழைக்க வேண்டும். கஸ்டமர் கேர் அதிகாரிகள் தேவையான தகவல்களை உறுதி செய்த பிறகு உடனடியாக யுபிஐ ஐடியை பிளாக் செய்து விடுவார்கள்.. பேடிஎம் யூசர்கள் இணையதளத்தின் 24 மணி நேர ஹெல்ப் செக்ஷனையும் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications