SBI பேங்க்கில் அக்கவுண்ட் இருக்குதா? உங்க எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம் கார்டு தொலைஞ்சுருச்சா? ஈஸியா பெறலாம்
சென்னை: எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், அந்த கார்டை பிளாக் செய்வதற்கும், புதிய ஏடிஎம் கார்டு பெறுவதற்கும் எஸ்பிஐ எளிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் நீங்கள் 5 நிமிடத்திலேயே ஆன்லைனில் கணக்கை துவங்கவிடலாம்.. இதற்கு எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, "சேமிப்பு வங்கி கணக்கு" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு, Apply Now என்ற பட்டனையும் கிளிக் செய்ய வேண்டும் அடுத்ததாக, எஸ்பிஐ "சேமிப்பு கணக்கு" விருப்பத்தை தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை நிரப்பி, "Submit" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
ஆவணங்கள்: இப்போது, வங்கி கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்தவுடனேயே, வங்கி சரிபார்ப்பு செயல்முறை தொடங்கப்படும். இறுதியில், 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் உங்கள் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு திறக்கப்படும். உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தாலும், அதையும் ஆன்லைன் மூலமே டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம்.
அதேபோல ஏடிஎம் கார்டுகளையும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.. பொதுவாக எந்தவகையான ஏடிஎம் கார்டுகளாக இருந்தாலும், அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்..
பத்திரம்: உங்கள் ஏடிஎம் கார்டை வேறு யாராவது திருடிவிட்டால் அல்லது உங்கள் கார்டை நீங்கள் தொலைத்துவிட்டால், அதை பிறர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதிலும், சைபர் கிரைம் மூலம், தொலைந்துபோன உங்கள் ஏடிஎம் / டெபிட் கார்டு தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
எனினும், இதையெல்லாம் தவிர்க்க, எஸ்பிஐ ஒரு அரிய வாய்ப்பை உருவாக்கி உள்ளது.. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்று சொல்லப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காகவே, ஏடிஎம் / டெபிட் கார்டினை திரும்ப பெறுவதற்காக, ஆன்லைனில் வசதி ஏற்படுத்தி தந்திருக்கிறது. எப்படி தெரியுமா?
பிளாக் கார்டு: உங்களது எஸ்பிஐ ஏடிஎம் / டெபிட் கார்டு தொலைந்துவிட்டால், முதலில் அதை பிளாக்செய்துவிட வேண்டும். எஸ்எம்எஸ் வழியாக மெசேஜ் அனுப்பி உங்கள் ஏடிஎம் கார்டை பிளாக் செய்யலாம்.. உங்கள் மொபைல் எண்ணிலிருந்து, "பிளாக் XXXX" (உங்கள் எஸ்பிஐ கார்டின் கடைசி 4 நம்பர்கள்) என டைப் செய்து 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
அல்லது 1800 11 2211, 1800 425 3800, 080 2659 9990 என்ற கட்டணமில்லாத எண்களில் அழைத்தும், உங்கள் ஏடிஎம் கார்டை பிளாக் செய்வதற்கான கோரிக்கையை விடுக்கலாம்.
புதிய கார்டு: புதிய எஸ்பிஐ ஏடிஎம் கார்டு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? www.onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்குள் நுழைந்து, "மின் சேவைகள்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு "ஏடிஎம் கார்டு சேவைகள்" என்ற ஆப்ஷனுக்கு சென்று "ஏடிஎம் / டெபிட் கார்டைக் கோருங்கள்" என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- SMS ஓடிபி நம்பரை பதிவிட்டு "உறுதிப்படுத்து" என்பதைக கிளிக் செய்ய வேண்டும்
- இப்போது அட்டை வழங்கப்பட விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- இறுதியில் அட்டையில் அச்சிட விரும்பும் பெயரை பதிவிட்டு, அட்டை வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் .. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும். கடைசியாக "சமர்ப்பி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது புதிய பக்கம் ஒன்று தோன்றும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, "சமர்ப்பி" என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்
- உங்கள் கார்டு கோரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு புதிய செய்தி, தற்போது உங்கள் முன்புள்ள ஸ்கிரீனில் காட்டப்படும். அவ்வளவுதான், உங்களது புதிய எஸ்பிஐ ஏடிஎம் / டெபிட் கார்டுகள், உங்களது முகவரிக்கு ஒரு வாரத்துக்குள் கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications