12 லட்சமாச்சே! பழைய வருமான வரி பிரிவில் இருந்து புதிய வருமான வரி பிரிவிற்கு மாறுவது எப்படி தெரியுமா?
சென்னை: புதிய வருமான வரி பிரிவில் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் பலரும் அதை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பழைய வருமான வரி பிரிவில் இருக்கும் பலர் புதிய வருமான வரி பிரிவை தேர்வு செய்ய விரும்புகின்றனர்.
பொதுவாக வருமான வரி கட்ட தொடங்கும் எல்லோருக்கும் தானாக புதிய வருமான வரி பிரிவே 2020க்கு பின் தேர்வு செய்யப்படும். தேவை உள்ளவர்கள் பழைய வருமான வரி பிரிவிற்கு மாறலாம். தற்போது புதிய வருமான வரி பிரிவில் பல சலுகைகள் தரப்படுவதால் பலர் மீண்டும் புதிய வருமான வரி பிரிவிற்கே மாற விரும்புகின்றனர்.

உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறைகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் வரி பிரிவை மாற்ற விரும்பினால், பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி மாறுவது?:
உங்கள் எச்.ஆரிடம் இதை பற்றி அறிவிக்க வேண்டும்.
நிதியாண்டின் (ஏப்ரல்) தொடக்கத்தில் பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான வரி விதிப்பைத் தேர்ந்தெடுக்குமாறு எச். ஆர் உங்களிடம் கேட்பார்கள். அப்போது நீங்கள் தெரிவிக்கலாம்.
நீங்கள் ஏற்கனவே ஒரு முறையை தேர்ந்தெடுத்திருந்தாலும், மாற்ற விரும்பினால், உங்கள் எச். ஆரிடம் கூறலாம். ஆண்டின் நடுப்பகுதியில் மாற்றங்களை அனுமதித்தால் மாறிக்கொள்ளலாம்..
இல்லையென்றால் ஜூலை 31ம் தேதிக்கு முன் நீங்கள் ஐடிஆர் பைல் செய்யும் போது வருமான வரி பிரிவை மாற்றிக்கொள்ள முடியும்.
நீங்கள் சம்பளம் வாங்கும் நபர் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் பழைய - புதிய வரி முறை இடையே மாற முடியும்.
நீங்கள் சொந்தமாக பிஸ்னஸ் செய்பவர் என்றால் அதற்காக Form 10-IE ஐ நிரப்ப வேண்டும்.
பிஸ்னஸ் செய்பவர்கள்.. ஒருமுறை பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாறிவிட்டீர்கள் என்றால் மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே பழைய முறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.
எந்த முறை முக்கியம்:
புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே நிலையான கழிவு 75 ஆயிரம் வரும். இதன் மூலம் 12.75 லட்சம் வரை வரி கிடையாது. இந்த மாற்றங்கள் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.
புதிய வருமான வரி முறை; புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது.
அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
அதுவே நீங்கள் 13லட்சம் வாங்குகிறீர்கள் என்றால்.. அதாவது உங்களின் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது
உங்களின் முதல்
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய் 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
பழைய வரி விதிப்பு முறை. அது நீங்கள் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்து இருந்தால்.. நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications